ஆசனவாயில் இருந்து அதிகளவு துர்நாற்ற வாயுக்கள் வெளியேறுகிறதா? இதை சரி செய்ய வேப்பம் பூவை இப்படி ட்ரை பண்ணுங்க!!
ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் செரிமானக் கோளாறு,மலச்சிக்கல் பாதிப்பு ஏற்படுகிறது.இந்த பாதிப்புகள் ஏற்பட்டால் குடலில் அதிகளவு கெட்ட வாயுக்கள் தேங்கி தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தி விடும்.இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேப்பம் பூ வைத்து ஒரு குளிர் பானம் செய்து குடியுங்கள்.
தேவையான பொருட்கள்:-
1)வேப்பம் பூ – 2 தேக்கரண்டி
2)மிளகுத் தூள் – சிட்டிகை அளவு
3)இஞ்சி(நறுக்கியது) – 1 தேக்கரண்டி
4)மாங்காய் துருவல் – 1 தேக்கரண்டி
5)உப்பு – தேவையான அளவு
6)வெல்லம் – 2 தேக்கரண்டி
செய்முறை:-
முதலில் ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும்.பிறகு அதை உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு துண்டு மாங்காயை சீவல் கொண்டு சீவி எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர் 2 கருப்பு மிளகை உரலில் போட்டு தட்டி எடுத்துக் கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த நீர் ஒரு கப் அளவு ஊற்றிக் கொள்ளவும்.பிறகு அதில் 2 தேக்கரண்டி சுத்தம் செய்த வேப்பம் பூ,இடித்த இஞ்சி,இடித்த மிளகுத் தூள் சேர்த்து கலந்து விடவும்.
பிறகு சுவைக்காக 2 தேக்கரண்டி வெல்லம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்தால் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த வேப்பம் பூ சர்பத் தயார்.இதை அடிக்கடி செய்து குடித்து வந்தால் குடலில் தேங்கிய கெட்ட வாயுக்கள் அனைத்தும் வெளியேறி குடல் சுத்தமாகும்.