Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூச்சுத் திணறல் பிரச்சனை இருக்கின்றதா! இதை குணப்படுத்த இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!!

#image_title

மூச்சுத் திணறல் பிரச்சனை இருக்கின்றதா! இதை குணப்படுத்த இந்த டிப்ஸ் டிரை பண்ணுங்க!!

நம்மில் சிலருக்கு இருக்கும் மூச்சுத் திணறல் பிரச்சனையை சரி செய்வதற்கு பின்பற்றவேண்டிய மூன்று டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

பொதுவாக மூச்சுத் திணறல் என்பது நமது சுவாசப் பாதையில் சளி அல்லது தூசு அடைத்துக் கொண்டிருந்தால் மூச்சுத் திணறல் பிரச்சனை ஏற்படும். நாம் பொதுவாக படி ஏறும்பொழுதும் அதிக எடை கொண்ட பொருட்கள் தூக்கும் பொழுது மூச்சிரைப்பது இயல்பான ஒன்று. ஆனால் அதுவே கடுமையாக இருந்தால் அது இதய நோய் அல்லது நுரையீரல் தேற்று நோயின் அறிகுறியாக இருக்கும். இதை நாம் கவனிக்காமல் விட்டால் நம் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

எனவே சாதரணமாக மூச்சுத் திணறல் இருக்கும் பொழுது இதை சரி செய்ய வேண்டும். எனவே இந்த மூச்சுத் திணறல் சரி செய்யும் மூன்று வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மூச்சுத் திணறலை குணப்படுத்தும் மூன்று டிப்ஸ்…

* மூச்சுத் திணறல் பிரச்சனை இருக்கும் பொழுது ஆவி பிடிக்கலாம். ஆவி பிடிக்கும் பொழுது நமது சுவாசப் பாதையை திறக்க முடியும். தண்ணீரை சூடு செய்யும் பொழுது அதில் புதினா இலைகள் அல்லது துளசி இலைகளை சேர்த்து ஆவி பிடித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். தலை இலைகள் சேர்த்து ஆவி பிடிக்கலாம். அல்லது யூக்லிப்டஸ் ஆயில் ஓரிரண்டு சீட்டுகள் சேர்த்து ஆவி பிடிப்பது மூலமாக மூச்சுத் திணறல் பிரச்சனையை சரி செய்யலாம். மருந்து கடைகளில் விற்கப்படும் ஆவி பிடிக்கும் மாத்திரைகளை வாங்கி பயன்படுத்துவது கூடாது.

* மூச்சுத் திணறல் பிரச்சனை இருப்பவர்கள் வெங்காயம் சாப்பிடலாம். வெங்காடயத்தில் சல்ஃபர், ஆண்டிமைக்ரோபியல் தன்மைகள் உள்ளது. இந்த சத்துக்கள் தொற்று நோய் ஏற்படும் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கின்றது. வெங்காயம் சாப்பிடுவதால் நுரையீரலின் வீக்கத்தை குறைத்து காற்றுப் பாதையை திறக்கச் செய்து மூச்சுத் திணறலை குறைக்கின்றது.

* மூச்சுத் திணறில் இருக்கும் பொழுது சூடாக எதையாவது குடிக்கலாம். சளி இருக்கும் பொழுது நமக்கு மூச்சுத் திணறல் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. அந்த சமயப் நாம் சூடாக எதையாவது குடிக்கும் பொழுது சளியை இளக்கி காற்றுப்பாதையில் இருக்கும் அடைப்பை நீக்க உதவி செய்கின்றது. மூச்சுத் திணறல் இருக்கும் பொழுது வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது மூலிகை டீ அல்லது கஷாயம் வைத்து குடிப்பதன் மூலமாக மூச்சுத் திணறல் பிரச்சனையை சரி செய்யலாம்.

Exit mobile version