மூக்கு ஓட்டைக்குள் சீழ் கொப்பளம் உள்ளதா? இதை குணமாக்க இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!

0
153
Is there a pus in the nostril? Do this remedy to cure it!!

மூக்கு ஓட்டைக்குள் சீழ் கொப்பளம் உள்ளதா? இதை குணமாக்க இந்த வைத்தியத்தை செய்யுங்கள்!!

சுவாச உறுப்பான மூக்கில் சீழ் கொப்பளம் உருவானால் அவை வலி,அரிப்பு,எரிச்சலை ஏற்படுத்தும்.உடல் சூடு,மூக்கில் தொற்று கிருமிகள் ஏற்படுதல் போன்ற காரணங்களால் இதுபோன்ற கொப்பளங்கள் உருவாகிறது.

அது மட்டுமின்றி இறந்த செல்கள் அதிகம் இருத்தல் மற்றும் மூக்கு பகுதியில் எண்ணெய் சுரப்பு அதிகம் இருத்தல் போன்ற காரணங்களாலும் இந்த சீழ் கொப்பளங்கள் உருவாகிறது.இதை ஆரம்ப நிலையில் சரி செய்து கொண்டால் தேவையற்ற அவதிகளை தவிர்க்கலாம்.

அறிகுறிகள்:-

1)மூக்கு பகுதியில் சிவப்பு அல்லது வெண் புள்ளிகள் தோன்றுதல்

2)மூக்கு பகுதியில் வலி மற்றும் வீக்கம்

மூக்கு – சீழ் கொப்பளத்திற்கு தீர்வு:

*தண்ணீர்

ஒரு கப் தண்ணீரை வெது வெதுப்பாக சூடாக்கி கொள்ளவும்.பின்னர் அதில் ஒரு காட்டன் துணியை நினைத்து மூக்கின் மீது ஒத்தடம் கொடுத்தால் சீழ் கொப்பளங்கள் எளிதில் மறைந்து விடும்.

*வேப்பண்ணெய்

மூக்கின் துவாரத்தில் உள்ள சீழ் கொப்பளம் மீது சிறிது வேப்பண்ணெய் விட்டால் தொற்று கிருமிகள் அழிந்து அவை குணமாகிவிடும்.

*எலுமிச்சை சாறு

சிறிது எலுமிச்சை சாறை சீழ் கொப்பளம் மீது படும்படி வைத்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும்.

*ஆப்பிள் சீடர் வினிகர்

1/4 கிளாஸ் நீரில் 1/4 தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து மூக்கை சுத்தம் செய்தால் சீழ் கொப்பளங்கள் குணமாகும்.

*ஆவி பிடித்தல்

ஒரு கப் நீரில் வேப்பிலை,மஞ்சள் சேர்த்து கொதிக்க விட்டு ஆவி பிடித்தால் மூக்கில் உள்ள சீழ் கொப்பளம் குணமாகுவதோடு தொற்று கிருமிகள்,அழுக்குகள் நீங்கும்.

*தேங்காய் எண்ணெய்

1/4 தேக்கரண்டி வெதுவெதுப்பான தேங்காய் எண்ணையை மூக்கில் உள்ள சீழ் கொப்பளம் மீது வைத்தால் அவை விரைவில் ஆறி விடும்.