Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் ஒரே எலி தொல்லையா இருக்கா? ஒரு மணி நேரத்தில் முழுத் தீர்வு கிடைக்க இப்படி செய்யுங்கள்!!

#image_title

வீட்டில் ஒரே எலி தொல்லையா இருக்கா? ஒரு மணி நேரத்தில் முழுத் தீர்வு கிடைக்க இப்படி செய்யுங்கள்!!

நம்மில் பலர் வீடுகளில் எலி நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இந்த எலி அளவில் சிறியவை என்றாலும் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயத்தை கொண்டிருக்கிறது. எலி தொல்லை இருக்கும் வீட்டில் குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இந்த ஆபத்து நிறைந்த எலிகளை விரட்ட நாமும் பல வழிகளை மேற்கொண்டு இருப்போம். ஆனால் பலன் ஏதும் கிடைத்தபாடில்லை என்பது தான் நிதர்சனம்.

*வீட்டிற்கு அருகில் சாக்கடை, டிச்சி உள்ளிட்டவைகள் இருந்தால் எலி பெருக்கம் அதிகம் இருக்கும். இதனால் எலிகள் வீட்டிற்குள் வர அதிக வாய்ப்பு இருக்கிறது.

*வீட்டிற்குள் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தால் அதை மோப்பம் பிடித்துக் கொண்டு எலிகள் வீட்டிற்குள் வந்து விடும்.

*மண் தரை உள்ள வீடு, ஓட்டு வீடு, குடிசை வீடு ஆகியவற்றில் எலிகள் எளிதில் நுழைந்து உற்பத்தியாகி விடும்.

எலியால் பரவும் உயிருக்கு ஆபத்து நிறைந்த நோய்கள்:-

*லெப்டோஸ்பிரோசிஸ் எனும் மரணத்தை ஏற்படுத்தும் நோய் எலியின் சிறுநீர் மூலம் பரவுகிறது.

*ஹெப்படைடிஸ் ஈ என்ற கிருமிகள் எலியின் மூலம் பரவுகிறது.

*கொடிய நோயான பிளேக் நோய் எலியின் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*கோதுமை மாவு – 3 தேக்கரண்டி

*வினிகர் – தேவையான அளவு

*கற்பூரம் – 2 கட்டி

*டூத் பேஸ்ட் – தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பவுலில் 3 தேக்கரண்டி அளவு கோதுமை மாவு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து சிறிதளவு வினிகர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

அடுத்து பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம்(சூடம்) 2 எடுத்து இடித்து கொள்ளவும். இதனுடன் பல் துலக்க உபயோகிக்கும் பேஸ்ட் சிறிதளவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பின்னர் தாயார் செய்து வைத்துள்ள கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து சப்பாத்திக்கு உருட்டுவது போல் உருட்டி வைத்துக் கொள்ளவும்.

அடுத்து தயார் செய்து வைத்துள்ள கற்பூரம் + டூத் பேஸ்ட் கலவையை சிறிதளவு எடுத்து உருட்டி வைத்துள்ள சப்பாத்தி மாவில் சேர்த்து உருண்டை பிடித்துக் கொள்ளவும்.

இப்படி எல்லா சப்பாத்தி மாவையும் உருண்டைகளாக பிடித்து எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்து விடவும்.

இந்த உருண்டைகளை எலிகள் உண்ணும் பொழுது அதன் வயிறு வீங்கி இறந்து விடும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*டீ தூள் வேஸ்ட் – தேவையான அளவு

*அந்துருண்டை

*பாராசிட்டமால் மாத்திரை – 1

*கோதுமை மாவு – சிறிதளவு

*சப்பாத்தி – 1
(அல்லது)
பிரட்

செய்முறை.:-

நாம் டீ வைத்து வடிகட்டிய பின்னர் இருக்கும் டீ தூள் வேஸ்ட் சிறிதளவு எடுத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு அந்துருண்டை மற்றும் ஒரு பாராசிட்டமால் மாத்திரையை இடித்து தூள் செய்து கொள்ளவும்.

ஒரு வேஸ்ட் பவுலில் எடுத்து வைத்துள்ள டீ தூள் கலவை மற்றும் இடித்து வைத்துள்ள அந்துருண்டை + பாராசிட்டமால் பொடியை சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் சிற்தளவு கோதுமை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் சில துளி தண்ணீர் சேர்த்து பிரட்டிக் கொள்ளவும்.

அடுத்து ஒரு மீந்து போன சப்பாத்தி ஒன்றை எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள கலவையை சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ரோல் செய்து சிறு சிறு துண்டுகளாக 4 முதல் 5 பீஸாக கட் செய்து கொள்ளவும்.

இந்த சப்பாத்தி பீஸை எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் வைக்கவும். இதை எலி உண்ட அடுத்த 1/2 மணி நேரத்தில் செத்து மடிந்து விடும்.

Exit mobile version