Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீட்டில் எங்கு பார்த்தாலும் கடி எறும்பு தொல்லையா இருக்கா? அப்போ இத்தனை நாளா இதை ஏன் ட்ரை பண்ணாம விட்டீங்க?

#image_title

வீட்டில் எங்கு பார்த்தாலும் கடி எறும்பு தொல்லையா இருக்கா? அப்போ இத்தனை நாளா இதை ஏன் ட்ரை பண்ணாம விட்டீங்க?

எறும்புகளின் சிவப்பு எறும்பு,சாமி எறும்பு என்று சொல்லப்படும் கருப்பு எறும்பு,கட்டெறும்பு என்று பல்வேறு வகைகள் இருக்கிறது.நம்மில் பலர் வீடுகளில் இந்த எறும்பு தொல்லைகள் அதிகம் இருக்கும்.இவை உண்ணும் உணவு,இனிப்பு பொருட்கள் என்று அனைத்து இடங்களிலும் வரிசை கட்டி செல்கிறது.நாம் உடுத்தும் துணிகளில் கூட இவை பரவலாக காணப்படுகிறது.நாம் உண்ணும் உணவு பண்டம் கடுகளவு விழுந்தால் கூட அடுத்த நொடியில் எறும்பு கூட்டம் அதை உண்ண வரிசை கட்டிக்கொண்டு வரும்.

இத்தனை எறும்புகள் எங்கிருந்து வருகிறது? எப்படி இவ்வளோ எறும்புகள் உற்பத்தியாகிறது என்ற ஆராய்ச்சி நமக்கு தேவையில்லை.நமக்கு தேவை அதை வீட்டிற்குள் வராமல் தடுக்க வேண்டும் அல்லது ஒழிக்க வேண்டும்.இதற்காக கடைகளில் பணம் கொடுத்து ரசாயனப் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் எறும்பு தொல்லைக்கு தீர்வு கண்டு விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*கற்பூரம் – 4

*பூண்டு – 3 பற்கள்

*இலவங்கம் – 6

செய்முறை விளக்கம்:-

1) சமையலுக்கு பயன்படுத்தும் பூண்டில் 3 பற்கள் எடுத்து அதன் தோலை நீக்கி கொள்ள வேண்டும்.

2) மருத்துவ குணம் நிறைந்த மற்றொரு பொருளான இலவங்கத்தை உரித்த பூண்டுடன் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.

3) பின்னர் இதை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ள வேண்டும்.அதனோடு 1 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அவற்றை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

4) 15 நிமிடங்கள் கழித்து அந்த வேறு ஒரு பவுலுக்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

5) அதில் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரத்தில் நான்கு எடுத்து தூள் செய்து கலந்து கொள்ள வேண்டும்.

6) இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் கடி எறும்பு கூட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே பண்ண வேண்டும்.இந்த முறையை அடிக்கடி செய்து வந்தோம் என்றால் நம்மை பாடாய் படுத்தி வரும் கடி எறும்பு கூட்டங்களை எளிதில் வீட்டை விட்டு வெளியேற்றி விடலாம்.

Exit mobile version