பெட்போர்டுஷைர் என்ற நகரம் இடம் இங்கிலாந்து நாட்டின் தென்பகுதியில் பசார்டு என்ற இடத்தில் உள்ளது. இந்த நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 10 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.3 ஆக பதிவாகி உள்ளது. இதனால் வெடிகுண்டு வெடித்தது போன்று சத்தம் கேட்டுள்ளது. இந்நிலடுக்கத்தினால், அந்த பகுதியில் இருந்த பல வீடுகள் அதிர்ந்துள்ளன. வீடுகளின் கதவுகள் ஆடியுள்ளன. சுவரில் பொருத்தப்பட்டிருந்த டி.வி. உள்ளிட்ட பொருட்கள் குலுங்கின. 5 வினாடிகள் வரை நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பலர் அச்சமடைந்து உள்ளனர்.