கேஸ் அடுப்பின் பர்னரில் கரியாக இருக்கின்றதா? அதை எளிமையான முறையில் நீக்க இந்த டிப்ஸ் பலோ பண்ணுங்க!!

0
169
Is there charcoal in the burner of the gas stove? Follow these tips to remove it easily!!

தற்பொழுது எல்லாருடைய வீட்டிலும் கேஸ் அடுப்பு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எங்காவது கிராமத்தில் வேண்டுமானால் விறகு அடுப்பு கொண்டு சமையல் வேலை செய்வார்கள். நகரத்தில் கேஸ் அடுப்பை தவிற விறகு அடுப்பை பயன்படுத்துவதை பார்க்க முடியாது.

என்னதான் கேஸ் அடுப்பு பயன்படுத்தினாலும் அதில் கரி ஏற்படும். அதாவது தீ எரியும் அந்த பர்னரில் கரி ஏற்படும். இது நாளடைவில் அதிகமாகி பர்னரில் அடைப்புகளை ஏற்படுத்தும். இதனால் அடுப்பு நன்றாக எரியாமல் போக வாய்ப்பு இருக்கின்றது. எனவே கேஸ் அடுப்பில் இருக்கும் பர்னரில் உள்ள கரியை  நீக்குவது முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. எனவே பர்னரில் ஏற்படும் அந்த கரியை எவ்வாறு நீக்குவது என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* வினிகர்

* சமையல் சோடா

* உப்பு

* எலுமிச்சை சாறு

செய்முறை

பர்னர் மூழ்கும் அளவிற்கு ஒரு பாத்திரம் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் ஒரு கிளாஸ் அளவு வெதுவெதுப்பான நீர் எடுத்து ஊற்றிக் கொள்ள வேண்டும்.

பின்னர் இதில் ஒரு டீஸ்பூன் அளவு சமையல் சோடா, ஒரு டீஸ்பூன் அளவு வினிகர், பாதி எலுமிச்சை சாறு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு கலந்து விட்டு கேஸ் அடுப்பில் உள்ள பர்னரை எடுத்து இதில் போட்டு ஊற வைக்க வேண்டும்.

சுமார் 3 முதல் 4 மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். இது ஊறிய பின்னர் பர்னரை எடுத்து பிரஷ் பயன்படுத்தி நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் பர்னரில் உள்ள கரி அனைத்தும் நீங்கி பர்னர் புதுசு போல மாறும்.