Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் உடலில் இரத்தம் இல்லையா? உடனடியாக இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் “ஓட்ஸ் + 4 பெருட்கள்” சேர்க்கப்பட்ட லட்டு!!

Is there no blood in your body? A Latte with "Oats + 4 Beruts" that boosts blood production instantly!!

Is there no blood in your body? A Latte with "Oats + 4 Beruts" that boosts blood production instantly!!

உங்கள் உடலில் இரத்தம் இல்லையா? உடனடியாக இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் “ஓட்ஸ் + 4 பெருட்கள்” சேர்க்கப்பட்ட லட்டு!!

உடலில் இரத்த ஓட்டம் சீரக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.இரத்தத்தில் இருக்கின்ற ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் இரத்த சோகை,உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும்.இந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்க சில சத்தான பொருட்களை கொண்டு லட்டு தயாரித்து சாப்பிடுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)இன்ஸ்டன்ட் ஓட்ஸ்
2)பாதாம் பருப்பு
3)வேர்க்கடலை
4)வால்நட்
5)ஏலக்காய் தூள்
6)பேரிச்சம் பழம்
7)நெய்

செய்முறை:-

முதலில் அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கப் இன்ஸ்டன்ட் ஓட்ஸ் சேர்த்து மிதமான தீயில் வறுத்தெடுத்து கொள்ளவும்.ஓட்ஸ் கருகிட கூடாது.பொன்னிறமாக வறுபட வேண்டும்.

இதை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.பின்னர் 1/4 கப் பாதாம் பருப்பு,1/4 கப் வேர்க்கடலையை அதே வாணலியில் போட்டு லேசாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.

பிறகு இதேபோல் வால்நட்டை வறுத்து ஆறவிடவும்.அதன் பின்னர் மிக்ஸி ஜார் எடுத்து வறுத்த ஓட்ஸை போட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.

அதன் பின்னர் வறுத்த வேர்க்கடலை,வால்நட்,பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இதை அரைத்து வைத்துள்ள ஓட்ஸில் கலந்து விடவும்.

அதன் பிறகு 15 பேரிச்சம் பழத்தை விதை நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.இந்த பேரிச்சம் பழத்தை அரைத்து வைத்துள்ள பொருட்களுடன் கலந்து விடவும்.வாசனைக்காக சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து கையில் நெய் தடவிக் கொண்டு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

இந்த ஓட்ஸ் சத்து உருண்டை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.இரத்த சோகை,உடல் சோர்வு உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும்.

Exit mobile version