Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழ்நாட்டில் நரிக்குறவ இனத்தவர் வாழ வழியில்லையா:? கிறிஸ்தவ மத போதகரால் நரிக்குறவர்களுக்கு நடந்த அநீதி?

தங்களை ஏமாற்றி இருப்பிடங்களை அபகரித்த கிறிஸ்தவ மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு சார்பில்,காஞ்சிபுரமாவட்ட நிர்வாகம் காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் நரிக்குறவ இனமக்கள் வசிக்க இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டு,அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் அமைத்துத் தரப்பட்டது.இவர்கள் அவ்விடத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் அங்கே 50 சென்ட்க்கும் மேலாக நரிக்குறவர்களின் நிலத்தை ஆக்கிரமித்து,மேலும் தங்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு சமூக விரோதிகளை கொண்டு அடித்து மிரட்டுவதாக நரிக்குறவர் சமூக மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.மதபோதகர் தங்கராஜ் தங்களை மீண்டும் அச்சுறுத்துவதாக கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதனையடுத்து காவல்துறை மற்றும் வருவாய்துறையினர் அவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடு விரைவில் தக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் நரிக்குறவ இன மக்கள் கலைந்து சென்றனர்.

Exit mobile version