Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அபுதாபியில் கொரோனா பரிசோதனை செய்ய இவ்வளவு பணமா?

அபுதாபி சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நேரடியாக சென்று கொரோனா மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக 370 திர்ஹாம் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த கட்டணம் குறைக்கப்பட்டு 250 திர்ஹாம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மையம் ஏற்படுத்தியுள்ள சிறப்பு பரிசோதனை மையங்களில் காரில் இருந்தே பரிசோதனை செய்யும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேற்கண்ட தகவலை அபுதாபி சுகாதாரத்துறை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளது.

Exit mobile version