இந்திய உணவுகளில் கறிவேப்பிலை பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது.இது உணவு சுவையை கூட்டுவதோடு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.
முடி உதிர்தல்,இளநரை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு தருகிறது.தினமும் ஒரு கொத்து கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.
கறிவேப்பிலை சத்துக்கள்:
1)வைட்டமின் ஏ
2)வைட்டமின் பி
3)வைட்டமின் சி
4)கால்சியம்
5)வைட்டமின் ஈ
6)இரும்பு
7)பாஸ்பரஸ்
8)ஆக்சிஜனேற்ற பண்புகள்
9)மக்னீசியம்
கறிவேப்பிலை பயன்கள்:
1)அஜீரணக் கோளாறை சரி செய்ய உதவுகிறது.
2)இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
3)முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
4)இளநரைக்கு தீர்வாக அமைகிறது.
5)சரும பராமரிப்பை மேம்படுத்த உதவுகிறது.
6)கல்லீரல் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
7)இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
8)சளி,இருமலுக்கு உடனடி தீர்வாக இருக்கிறது.
கறிவேப்பிலையின் தீமைகள்:
1)அதிகளவு கறிவேப்பிலை உட்கொண்டால் அது நரம்பு மண்டலத்தை பாதிக்கச் செய்துவிடும்.
2)சிலருக்கு கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஒவ்வாமை ஏற்படக் கூடும்.
3)அளவிற்கு அதிகமாக கறிவேப்பிலை சாப்பிடுவதால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து சில உடல் உபாதைகளை உண்டாக்கிவிடும்.
4)கறிவேப்பிலையை அதிகமாக உட்கொள்ளும் போது வயிற்றுவலி,வயிறு பிடிப்பு,வயிறு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
5)சிலருக்கு கறிவேப்பிலை சாப்பிடுவதால் மலச்சிக்கல் உண்டாக வாய்ப்பு இருக்கிறது.
6)கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அளவிற்கு அதிகமாக கறிவேப்பிலை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.எனவே அளவிற்கு அதிகமாக கறிவேப்பிலை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.