தென்காசி மாவட்டத்திற்கு இவ்வளவு பெரிய திட்டமா அதிரடியில் இறங்கிய முதல்வர்!

0
106

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக தென்காசி மாவட்டம் தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இருக்கின்ற தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டி இருக்கிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சென்ற 18-7-2019 அன்றைய தினம் சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில் பெரிய மாவட்டமாக இருக்கின்ற திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து வேண்டும் என அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆகியவர்களுக்கு பொதுமக்களிடமிருந்து வந்த கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்து, நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசியை தலைமையிடமாக அமைத்து ஒரு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுடைய 33வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு தமிழக முதல்வர் அவர்களால் 22-11-2019 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்திற்கு தென்காசி நகரில் 28 ஆயிரத்து 995 சதுர மீட்டர் பரப்பளவில் 119 கோடி ரூபாய் மதிப்பில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள். இந்த புதிய வளாகத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலகம், மாவட்ட கருவூல அலுவலகம், சிறுசேமிப்பு அலுவலகம் மகளிர் திட்ட அலுவலகம், எல்காட் அலுவலகம் கூட்ட அரங்கம், நில அளவை உதவி இயக்குனர் அலுவலகம், பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

மாவட்ட ஊரக முகமை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலகம், கூட்டுறவு துறை அலுவலகம், பதிவுத் துறை அலுவலகம், வேளாண்மை துறை அலுவலகம், கால்நடை பராமரிப்பு துறை அலுவலகம். சுகாதாரத் துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை தமிழ்வளர்ச்சித்துறை போன்ற துறைகளின் அலுவலகக் கட்டடங்கள் கட்டப்பட இருக்கின்றன.