Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொருட்களின் ஸ்டார் ரேட்டிங் தான் நமது கரண்ட் பில்லை நிர்ணயிக்கும்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

#image_title

பொருட்களின் ஸ்டார் ரேட்டிங் தான் நமது கரண்ட் பில்லை நிர்ணயிக்கும்!! மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

நம் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் எவ்வளவு மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நம் வீட்டில் உபயோகப்படுத்தப்படும் அனைத்து பொருட்களிலும் ஸ்டார் ரேட்டிங் என்பதை கொடுத்து இருப்பார்கள்.

அதில் ஸ்டார் ரேட்டிங் அதிகமாக இருந்தால் அது மிகக் குறைந்த மின்சாரத்தை இழுக்கும் என்று பொருள்.

அதுவே குறைந்த ஸ்டார் ரேட்டிங் இருந்தால் அதிக மின்சாரத்தை இழுக்கும் என்பது பொருள்.

உதாரணமாக 2.7 வாட்ஸ் பல்பில் அது எவ்வளவு வெளிச்சத்தை கொடுக்கிறது என்பதை பார்க்கும் முறை தான் EER (Energy Efficiency Ratio) மதிப்பு.

இதை, பல்பில் உள்ள 2.7 வாட்சை அந்த ஸ்டார் ரேட்டிங்கில் உள்ள luminous flux மதிப்போடு வகுக்கும்போது வருவது தான் EER மதிப்பு என்று கூறுவோம்.

வீட்டில் உபயோகம் செய்யும் பல்பை காட்டிலும் ஏசி, துணி துவைக்கும் இயந்திரம் மற்றும் குளிர்சாதனப் பெட்டி தான் அதிக மின்சாரத்தை இழுக்கும்.

ஏசி நம் அறையில் இருந்து எவ்வளவு வெப்பத்தை வெளியேற்றும் என்பதை கணக்கிடும் மதிப்பு தான் Btu (British Thermal Unit).

ஏசி ஒரு மணி நேரத்திற்கு 12 ஆயிரம் Btu வை அறையிலிருந்து வெளியேற்றும்.

இதற்கு EER மதிப்பை கணக்கிட ஏசியின் ஸ்டார் ரேட்டிங்கில் உள்ள கூலிங் கெப்பாசிட்டி மதிப்பை power consumption மதிப்போடு வகுக்க இதன் EER மதிப்பு கிடைத்துவிடும்.

இந்த ஸ்டார் ரேட்டிங்கை BEE அதாவது Bureau of energy efficiency என்று சொல்லப்படும் அரசின் கீழ் இயங்கி வரும் ஒரு அமைப்பு தான் அனைத்து பொருட்களுக்கும் ஸ்டார் ரேட்டிங் வழங்கி வருகிறது.

நம் அறையில் வெப்பம் அதிகமாக இருந்தால் ஏசி வேகமாக வேலை செய்து மின்சாரத்தை அதிகமாக இழுக்கும் வாய்ப்பு உள்ளது.

அதேபோல் அறையில் குறைந்த வெப்பம் இருந்தால் ஏசி மின்சாரத்தை குறைந்த அளவே இழுக்கும்.

இவ்வாறு ஒவ்வொரு கால நிலைக்கும் ஏற்ப ஏசியை கணக்கிட்டு அதை ISEER அதாவது Indian Seasonal Energy Efficiency Ratio மதிப்பில் குறிப்பிடுவர்.

உதாரணமாக மூன்று ஸ்டார் ஏசியை விட நாலு ஸ்டார் ஏசியில் யூனிட்ஸ் அளவு குறைவாக இருந்தால் அதை நாம் பயன்படுத்தலாம்.

மின்சாரம் அதிகம் உபயோகப்படுவதை குறைக்கலாம். எனவே எந்த பொருளை வாங்கும் போதும் ஸ்டார் ரேட்டிங்கை சரியாக பார்த்து வாங்க வேண்டும்.

அதில் முக்கியமாக Expiry date ஐ சரி பார்த்து வாங்க வேண்டும்.

Exit mobile version