Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிறுத்தை பட குழந்தையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!!

Is this a leopard picture baby? He has changed

Is this a leopard picture baby? He has changed

சிறுத்தை பட குழந்தையா இது? ஆள் அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே!!

கார்த்திக் டபுள் ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்ற படம் சிறுத்தை. அந்த படத்திற்கு பிறகு தான் இயக்குனர் சிவாவுக்கு அஜித்தை வைத்து தொடர்ந்து நான்கு படங்கள் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுத்தை படம் அப்போது பாக்ஸ் ஆபீஸில் 48 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்தது. சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக பேபி ரக்ஷண நடித்து இருப்பார். கதையில் குழந்தை கதாபாத்திரத்திற்கு சிவா அதிகம் முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்.

சிறுத்தை படத்தில் கியூட்டான குழந்தையாக இருந்த ரக்ஷன தற்போது வளர்ந்து டீனேஜ்  பெண்ணாக மாறி இருக்கிறார். கார்த்தியின் மகளாக நடித்த ரக்ஷண லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இவரை எங்கோ பார்த்த நினைவிருக்கிறதே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். சிலர் இவரை அடையாளம் கண்டுகொள்கின்றனர். சிறுத்தை படம் மட்டுமின்றி, கடல், ஒகே கண்மணி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார் ரக்ஷண.

அதன்பிறகு சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். பரதநாட்டியம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் ஆசை. அதற்காகவும் பல முயற்சிகளை எடுத்து தற்போது நடன பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். படிப்பு முடிந்தவுடன் நல்ல கதாபத்திரங்கள் கிடைத்தால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க விரும்புவதாக கூறியுள்ள ரக்ஷன, தனது வீட்டில் இதற்கு முழு ஆதரவும் கிடைக்கும் என்று நம்புவதாக கூறியுருக்கிறார்.

சிறுத்தை படத்தில் கார்த்தியுடன் நடித்ததைப் பற்றியும் பேசியிருந்தார் ரக்ஷன. அவர் கூறும்போது கார்த்திக் மிகவும் மென்மையானவர் எளிமையானவர் பழகுவதற்கு இயல்பான மனிதர். நிறைய கற்றுக் கொண்டேன் என்று தெரிவித்திருக்கிறார். கார்த்திக் ரக்ஷன பிறந்த நாளுக்கு பரிசுடன் சென்று ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.  இதனை தன்னால் மறக்கவே முடியாது என்று தெரிவித்திருக்கிறார் ரக்ஷன.

Exit mobile version