Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாலியல் தொல்லை அளித்தவருக்கு இப்படி ஓர் தண்டனையா? அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நீதிமன்ற தீர்ப்பு!

Order to remove roadside statues! High Court Next Action!

Order to remove roadside statues! High Court Next Action!

பாலியல் தொல்லை அளித்தவருக்கு இப்படி ஓர் தண்டனையா? அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த நீதிமன்ற தீர்ப்பு!

தற்போதைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிராக அதிகப்படியாக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.குறிப்பாக 6 வயது சிறுமி முதல் அனைத்து பெண்மணிகளுக்கும் பாலியல் தொல்லை நடந்து வருகிறது.சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் இதுபோன்ற தவறுகள் நடக்காது என அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர்.தற்பொழுது பெங்களூரில் 6 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொன்ற சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.அதனையடுத்து தற்போது பீகார் மாநிலத்தில் மதுபானி என்ற மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரில் லாலன் குமார் சபி  என்பவர் வசித்து வருகிறார்.

இவர் அந்த ஊரில்  சலவை தொழில் செய்து வநதுள்ளார்.குமார் அந்த ஊரில் உள்ள பெண்மணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து மானபங்கம் படுத்தியுள்ளார்.அதனால் அந்த ஊர் மக்கள் போலீசாரிடம் குமார் குறித்து புகார் அளித்துள்ளனர்.போலீசார் அந்த புகாரின் பேரில் குமாரை கைது செய்தனர்.பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.அதனையடுத்து தனக்கு ஜாமீன் தருமாறு நீதிமன்றத்தில் குமார் தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த வழக்கானது நீதிபதி அவினாஷ் முன்னிலையில் அமர்வுக்கு வந்தது.அந்த நீதிபதி பல விதிமுறைகளை கூறி அவருக்கு ஜாமீன் வழங்கினார்.

அந்த நீதிபதி கூறியதாவது,குமார் சலவை தொழில் செய்து வருவதால்,அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பெண்களின் துணிகளை இலவசமாக ஓர் மாத காலம் சலவை செய்து தர வேண்டும்.அதுமட்டுமின்றி துவைத்த ஆடைகளை ஐயர்ன் செய்து அவர்கள் வீட்டிற்கே சென்று தர வேண்டும் என்று கூறியுள்ளார்.இந்த பணிகளை குமார் செய்ய மறுத்தால் அந்த ஊரின் கிராம பஞ்சாயத்திடம் புகார் அளிக்கலாம்.அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் நீதிமன்றத்தில் கூற வேண்டும் என்று இவ்வாறு தீர்பளித்தார்.இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் கூறியதாவது,நீதிபதி அளித்த இந்த தீர்ப்பானது பெண்களுக்கு மரியாதையை ஏற்படுத்தி கொடுக்கும்.

அதுமட்டுமின்றி பெண்களுக்கு எதிரான மன நிலையில் இருப்பவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தி கொடுக்கும் என கூறியுள்ளார்.மேலும் பெண்களின் துணிகளை துவைக்க உபயோகிக்கும் சோப்புத்தூள் மற்றும் சோப் போன்றவைகளை வாங்கும் பொறுப்பு குமாரை சேர்ந்தது என்று கூறினார்.அதுமட்டுமின்றி எங்கள் கிராமத்தில் 225 பெண்மணிகள் உள்ளனர்.அவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் ஆடைகளை கொடுத்து துவைத்து கொள்ளலாம் என்றும் கூறினார்.குமாரின் 6 மாத கால பணி முடிந்த பிறகு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வேன் என்று கூறியிருந்தார்.

Exit mobile version