Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இப்படி ஒரு விளம்பரமா?

துபாயில் வசித்து வரும் தம்பதிக்கு  வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்பதை ஸ்கேன் மூலம் பார்த்து தெரிவிக்க பிரமாண்டமான விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக புர்ஜ் கலீபா கட்டிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரவு நேரத்தில் கவுண்ட்டவுனுடன் வயிற்றில் இருக்கும் குழந்தை குறித்த தகவலை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருக்க திடீரென்று கட்டிடம் முழுவதும் நீல நிற விளக்கொளியில் ‘இட்ஸ் அ பாய்’ அதாவது அவரது வயிற்றில் இருப்பது ஆண் குழந்தைதான் என்பதை உறுதிப்படுத்தும் தகவல் வெளியிடப்பட்டது. இதனை அடுத்து குடும்பம் முழுவதும் உற்சாகத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்த இந்த நிகழ்ச்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version