உலகம் முழுவதும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்துக்கே பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. உலக நாடுகள் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றன. கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 1 லட்சத்து 76 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும், பிரேசிலில் 1 லட்சத்து 14 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
இந்த இரு நாடுகளை தொடர்ந்து பலி எண்ணிக்கையில் 3வது இடத்தில் மெக்சிகோ உள்ளது. அந்நாட்டில் ஒரே நாளில் 6,482 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 56 ஆயிரத்து 216 ஆக உயர்வடைந்து உள்ளது. மெக்சிகோவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 60 ஆயிரத்து 254 ஆக உயர்ந்து உள்ளது. மெக்சிகோவில் கடந்த வெள்ளி கிழமை பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரம் ஆகவும், உயிரிழப்பு 504 ஆகவும் இருந்தது.