Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதுதான் ரஜினியின் கடைசி படமா? மிஷ்கின் உறுதியாக சொல்கிறார்!!

Is this Rajini's last film? Myshkin says for sure!!

Is this Rajini's last film? Myshkin says for sure!!

இதுதான் ரஜினியின் கடைசி படமா? மிஷ்கின் உறுதியாக சொல்கிறார்!!

இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். மேலும் அஞ்சாதே, நந்தலாலா, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, சைக்கோ போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது பிசாசு 2 படத்தை இயக்கி இருக்கிறார். இவர் நந்தலாலா படத்தில் மனநலம் குன்றியவராக நடித்து இருந்தார்.

இவர் தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் மிஷ்கின் அளித்த பேட்டி ஒன்றில், விஜய் நடித்த யூத் படத்தில் தான் உதவி இயக்குனராக பணியாற்றும் போது, அவர் ஒரு ஸ்டார் நடிகராக இருந்தார். ஆனால்  இப்போது நான் லியோ படத்தில் நடிப்பதற்காக சென்றபோது விஜய் என்னை  கட்டி தழுவி வரவேற்று மென்மையாக சிரித்தார்.

அப்படி அவரை பார்க்கும் போது உச்ச நட்சத்திரம் போல் தோன்றவில்லை ஒரு குழந்தையை பார்ப்பது போல் இருந்தது. அதே போல் அவருக்கும் தான் ஒரு உச்ச நட்சத்திரம் என்கிற எந்த எண்ணமும் இல்லை. தன்னை ஒரு சாதாரண நடிகராகவே நினைக்கிறார் என மிஷ்கின் கூறியுள்ளார்.

மேலும் தற்போது லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ், அதற்கு அடுத்த படியாக நடிகர் ரஜினிகாந்த் படத்தை இயக்க போவதாகவும், அதுதான் ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என அந்த பேட்டியில் மிஷ்கின் கூறியுள்ளார். எனவே ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது லோகேஷ் என்றும், அது அவருடைய கடைசி படம் என்பதும் உறுதியாகி உள்ளது.

Exit mobile version