Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த சீரியல் நடிகர் தான் பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் காதலரா..?? வைரலாகும் புகைப்படம்..!!

Is this serial actor boyfriend of Bigg Boss celebrity Archana..?? Viral photo..!!

Is this serial actor boyfriend of Bigg Boss celebrity Archana..?? Viral photo..!!

இந்த சீரியல் நடிகர் தான் பிக்பாஸ் பிரபலம் அர்ச்சனாவின் காதலரா..?? வைரலாகும் புகைப்படம்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அர்ச்சனா. முன்னதாக இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். இந்த சீரியலுக்கு பின்னர் இறுதியாக முடிந்த பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்தார். 

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் ஏகப்பட்ட பிரச்சனைகளை தனி ஆளாக நின்று சமாளித்து அர்ச்சனா பிக்பாஸ் வரலாற்றிலேயே பல புதிய சாதனைகளை நிகழ்த்தினார். அதன்படி முதல் முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக பட்டம் வென்றது அர்ச்சனா தான். அதுமட்டுமல்ல அதிக அளவில் வாக்குகளை பெற்றதும் அர்ச்சனா தான்.

இப்படி மக்கள் மத்தியில் ஏராளமான செல்வாக்கை பெற்ற அர்ச்சனா இப்போது வரை அவரின் அடுத்த ப்ராஜெக்ட் என்ன என்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் கூறவில்லை. இதற்கிடையில் விஜய் டிவியின் அது இது எது நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றிருந்தார். இந்நிலையில், அர்ச்சனாவின் காதலர் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதன்படி, அர்ச்சனா ஏற்கனவே பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நடிகர் அருண் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் ஒருவருடன் போட்டிங் சென்ற புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். ஆனால் அதில் அந்த பெண்ணின் முகம் தெரியவில்லை. 

இருப்பினும் அந்த பெண் அர்ச்சனா தான் என்று பலரும் அடித்து கூறுகிறார்கள். ஏனெனில் அர்ச்சனா சமீபத்தில் ஏற்காடு சென்றிருந்த நிலையில், தற்போது அருணும் அந்த புகைப்படத்தை ஏற்காட்டில் தான் எடுத்துள்ளார். எனவே அது அர்ச்சனா தான் என பலரும் கூறி வருகிறார்கள். உண்மை என்ன என்பதை அவர்களே கூறினால் தான் தெரியும்.

Exit mobile version