Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சூர்யாவின் அடுத்த படம் இதுதானா? இவருடன் தான்  கூட்டணி!

Is this Suriya's next film? The next alliance with him!

Is this Suriya's next film? The next alliance with him!

சூர்யாவின் அடுத்த படம் இதுதானா? இவருடன் தான்  கூட்டணி!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒரு வரலாற்று படத்தில் நடித்து வருகின்றார். அந்தப் படம் சூர்யா42 என அழைக்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சில மாதங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் மலையாள நடிகர் பிரிதிவிராஜ் உடன் தான் சூர்யா அடுத்த கூட்டணி சேர உள்ளார் என தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனத்தின் ராஜன் பிள்ளை வாழ்க்கை வரலாற்று கதையில்தான் சூர்யா நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது.

அந்த படத்தை பிரித்திவிராஜ் இயக்கப் போகிறார். ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. பிரித்திவிராஜ் தற்போது இந்த படத்திற்கான முதற்கட்ட பணியில் ஈடுபட்டு வருகிறார். ராஜன் பிள்ளையின் கதையானது பல்வேறு திருப்பங்களை கொண்டது. அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version