Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நகங்களில் இந்த அறிகுறியா.. கட்டாயம் இந்த நோய் தான்!! மக்களே எச்சரிக்கை!!

#image_title

நகங்களில் இந்த அறிகுறியா.. கட்டாயம் இந்த நோய் தான்!! மக்களே எச்சரிக்கை!!

நம் கைகளில் உள்ள நகங்களின் வண்ணத்தை வைத்தே நம் உடலில் என்ன நோய் இருக்கிறது, என்ன சத்து குறைபாடு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள முடியும். அதைத் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

* கை நகங்களில் புள்ளி புள்ளியாக இருக்கும் அல்லது கோடுகள் இருக்கும். இதை வைத்து அந்த காலங்களில் சிலர் உங்களுக்கு பணம் வரப்போகிறது என்றும் நிறைய பொருட்கள் கிடைக்கப் போகின்றது என்றும் கூறுவார்கள். ஆனால் அது உண்மை இல்லை. உங்கள் உடலில் புரோட்டீன் சத்து குறைபாடு உள்ளதே கைகளில் வெள்ளை வெள்ளையாக புள்ளிகள் வருவதற்கும் கோடுகள் வருவதற்கும் காரணம். இதை சரி செய்ய புரோட்டீன் உள்ள சைவ உணவுகளை எடுத்துக் கொண்டாலும் சரி அல்லது மீன், முட்டை, கோழிக் கறி போன்ற அசைவ உணவை எடுத்துக் கொண்டாலும் சரி. எந்த உணவு எடுத்தாலும் புரோட்டீன் உள்ள உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து கை நகங்கள் கிளி மூக்கு போல வீங்கிக் கொள்ளும். இதை நெயில் கிளப்பிங்(Nail Clubbing) என்று அழைப்பர். இந்த நோய் இருந்தால் நம் உடலில் ஆக்சிஜன் குறைபாடு உள்ளது என்று அர்த்தம். இந்த நெயில் கிளப்பிங் சுவாசக் கோளாறுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், ஆஸ்துமா நோய்க்கு மருந்து எடுத்துக் கொள்பவர்களுக்கு இருக்கும். அது மட்டுமில்லாமல் இதயம் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கும், நம் உடலில் நல்ல இரத்தமும் கெட்ட இரத்தமும் கலக்கும் பொழுது இந்த நெயில் கிளப்பிங் வரும். மேலும் கரு சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்களுக்கும் சிகரெட் அதிகம் குடிப்பவர்களுக்கும் இந்த நெயில் கிளப்பிங் இருக்கும். இதை சரி செய்ய மருத்துவரை பார்த்து இந்த குறைபாடுகளில் ஏதேனும் ஒன்று உள்ளதா என்று அறிந்து அதற்கு ஏற்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து நகங்கள் வந்து ஸ்பூன் மாதிரி வளைந்து குழியாக இருக்கும். இதை நெயில் குயிலோனிக்கோ அல்லது ஸ்பூன் நெயில் என்று அழைப்பர். இது இரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக உள்ளவர்களுக்கு இருக்கும். அது மாதிரியே இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகமாக கலந்தாலும் இந்த பிரச்சனை வரும். இதற்க்கும் நீங்கள் மருத்துவரை அணுகி மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேணடும்.

* அடுத்து நகங்களின் ஓரங்களில் ரோஸ் நிறத்தில் இருக்கும். இதை டெர்ரி நெயில்ஸ் என்று அழைப்பர். இது பெரும்பாலும் வயதானவர்களின் உடலின் இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்களால் வரும். சிறிய வயது உடையவர்களுக்கு இதயம் தொடர்பான நோய்கள் இருந்தால் இந்த பிரச்சனை வரக்கூடும். அல்லது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய் இருந்தாலும் சர்க்கரை நோய் இருந்தாலும் டெர்ரி நெயில்ஸ் இருக்கும்.

* இன்னும் சிலருக்கு நகங்களில் நகங்களில் வரி வரியாக படிக்கட்டு போல இருக்கும். இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு மட்டுமே இருக்கும். இளைஞர்களுக்கு இது இருந்தால் அவர்களின் உடலில் வைட்டமின் பி12 சத்துக் குறைபாடு உள்ளது என்று அர்த்தம். அல்லது மெக்னீசியம் சத்துக்கள் உடலில் குறைவாக அள்ளது என்று அர்த்தம்.

* இன்னும் சிலருக்கு நகங்கள் சிறிய சிறிய துண்டுகளாக உடைந்து கொண்டே இருக்கும். இது எதனால் என்றால் உடலில் கால்சியம் சத்துக்கள் குறைவாக உள்ளது என்பதே இதற்கு காரணம். மேலும் தைராய்டு பிரச்சனை உள்ளவர்களுக்கும் நகங்கள் உடையும்.

* எல்லாருக்கும் நகங்கள் லேசான ரோஸ் கலரில் இருக்க வேண்டும். அது இல்லாமல் வெள்ளை நிறத்தில் இருந்தால் தம் உடலில் இரத்தத்தின் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.

ஒரு சிலருக்கு நகங்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இது நகங்களில் இருக்கும் பூஞ்சைகளில்(Fungus) நோயால் இருக்கும். சொரியாஸிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும், டயபெட்டிக் பிரச்சனை அதிகம் உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சனை வரக்கூடும். குழந்தைகளுக்கும் இந்த நகங்களில் உள்ள மாற்றங்களை வைத்து உடலில் என்ன சத்துக் குறைபாடு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version