Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டிரிங் டிரிங் ஐட்டம் பாடலை பாடியவர் இந்த நடிகையா? மறைந்தும் பலருடைய மனதில் வாழும் ஸ்ரீவித்யா! 

Is this the actress who sang the song Dring Dring Item? Srividya lives in the minds of many who disappear!

Is this the actress who sang the song Dring Dring Item? Srividya lives in the minds of many who disappear!

டிரிங் டிரிங் ஐட்டம் பாடலை பாடியவர் இந்த நடிகையா? மறைந்தும் பலருடைய மனதில் வாழும் ஸ்ரீவித்யா!
நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் வரும் டிரிங் டிரிங் என்ற பிரபலமான ஐட்டம் பாடலை பாடியவர் யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது.
நம்முடைய தமிழ் சினிமா மட்டுமின்றி சினிமா உலகில் ஒரு சில முகங்களை எளிதில் மறந்துவிட முடியாது. அவர்களை பார்க்க பார்க்க நமக்கு புத்துணர்வு பிறக்கும். அவ்வாறு முக அமைப்பை கொண்ட நடிகை ஸ்ரீவித்யா ஆவார்.
நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் ஆரம்பத்தில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று வந்தார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. குணச்சித்திர வேடங்களில் நடிக்கத்தான் பல வாய்ப்புகள் கிடைத்தது. இருப்பினும் கிடைத்த வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொண்ட நடிகை ஸ்ரீவித்யா பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ் பெற்றார்.
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர்களுடன் நடிக்கத் தொடங்கி நடிகர்கள் அஜித், விஜய் ஆகிய அடுத்த தலைமுறை நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து நடிகை ஸ்ரீவித்யா புகழ்பெற்றார். என்னாதான் ஆசைப்பட்ட கதாநாயகி வாய்ப்பு கிடைக்கிவில்லை என்றாலும் தனக்கு கிடைத்த கதாப்பாத்திரங்களில் முழு ஈடுபாடுடன் நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் சிறப்பாக நடித்து கொடுத்தார்.
நடிகை ஸ்ரீவித்யா அவர்களுக்கு அவருடைய கண்கள்தான் பலம். இதயத்தில் நினைப்பதை நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் கண்களை பயன்படுத்தி சொல்லிவிடுவார். இந்த திறமையை அவர் திரைப்படங்களிலும் வெளிப்படுத்தி இருப்பார். உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு சில காட்சிகளை நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் கண்களை வைத்து வெளிப்படுத்தி அந்த காட்சியை வெற்றியடையச் செய்து விடுவார்.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் நடிகை ஸ்ரீவித்யா அவர்களுக்கு இசையின் மீதும் ஆர்வம் உள்ளது. நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் சிறுவயது முதல் இசையை முறையாக கற்றுக் கொண்டவர். காரணம் நடிகை ஸ்ரீவித்யா அவர்களின் அம்மா மிகச்சிறந்த கர்நாட்டிக் பாடகி ஆவார். அம்மா பாடகி என்பதால் அந்த பழக்கம் அப்படியே நடிகை ஸ்ரீவித்யா அவர்களுக்கும் ஒட்டிக் கொண்டது.
நடிகை ஸ்ரீவித்யா அவர்களும் அம்மாவைப் போலவே நன்கு அழகாக பாடக் கூடியவர். நடிகை ஸ்ரீவித்யா அவர்கள் 16 வயதிலேயே இசையில் தேர்ச்சி பெற்று இருக்கிறார். இவர் பல பாடல்களை பாடியுள்ளார். அதில் ஒரு பாடல் மிகவும் பிரபலம் ஆகும்.
அந்த பாடல் நவரசநாயகன் கார்த்திக் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அந்த பாடல் டிரிங் டிரிங் என்று தொடங்கும் பாடலாகும். இந்த பாடலை பாடியவர் நடிகை ஸ்ரீவித்யா அவர்கள்தான். இந்த பாடலில் நடிகை டிஸ்கோ சாந்தி அவர்கள் நடனம் ஆடி இருப்பார். இப்பொழுது கேட்டாலும் இந்த பாடல் நன்றாக இருக்கும்.
Exit mobile version