லோகேஷ் கனகராஜ் முதல் முதலில் நிராகரித்த படம் இதுதானா? ரசிகர்கள் அதிர்ச்சி!

0
189
Is this the first film rejected by Lokesh Kanagaraj? Fans shocked!

லோகேஷ் கனகராஜ் முதல் முதலில் நிராகரித்த படம் இதுதானா? ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது வளர்ந்து வரும் இயக்குனர்களில் டாப் இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து டாப் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். மேலும்தொடர் வெற்றிகளுக்கு பிறகு லோகேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படமும் தமிழ் சினிமாவின் அதிக வசூல் செய்த திரைப்படமாக மாறியுள்ளது. இதனால் தற்போது அவரின் அடுத்த திரைப்படமான தளபதி 67 மீது தான் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.  மேலும் இந்த படம்  குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பாலிவுட் திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவலை வைத்துள்ளார். லோகேஷ் கனகராஜிற்கு மாஸ்டர் திரைப்படத்தை ஹந்தியில் ரீமேக் செய்ய வாய்ப்பு வந்தது.அதில் சல்மான் விஜய்யின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்த அந்த திரைப்படத்தை ப்ளீஸ் கனகராஜ் நிராகரித்துள்ளார். மேலும் அப்போது அவர் விக்ரம் திரைப்படத்தில் பணியாற்றி வந்ததால் அதனை நிராகரித்தாகவும் கூறியுள்ளார்.