Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தளபதி 68 படத்தின் ஹீரோயின் இவங்களா? வெங்கட் பிரபு சாய்ஸ்!!

Is this the heroine of Thalapathy 68? Venkat Prabhu's Choice!!

Is this the heroine of Thalapathy 68? Venkat Prabhu's Choice!!

தளபதி 68 படத்தின் ஹீரோயின் இவங்களா? வெங்கட் பிரபு சாய்ஸ்!!

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இவரது அடுத்த படமான தளபதி 68 படத்தை யார் இயக்க போகிறார்கள் என பெரிய எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அந்த வாய்ப்பு வெங்கட் பிரபுவுக்கு கிடைத்தது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.

யுவன்சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்திற்கான ஹீரோயினை ஏற்கனவே வெங்கட் பிரபு தேர்ந்தெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. அவர் வெங்கட் பிரபுவின் முந்தைய படமான கஸ்டடி படத்தின் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி.  அவர் ஏற்கனவே ஒரு பேட்டியில் நான் விஜயின் ரசிகை என கூறியுள்ளார். எனவே அவருடைய ரசிகையையே தளபதிக்கு ஹீரோயினாக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த முடிவை கஸ்டடி பட வேலைகளின் வெங்கட் பிரபு எடுத்துள்ளதாக தெரிகிறது. வெங்கட் பிரபுவை இயக்குனராக உறுதி செய்வதற்கு முன்பாக தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி விஜய்க்கு  ஒரு சாய்ஸ் ஆக இருந்தார். அவரும் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியைத்தான் முடிவு செய்ததாக தெரிகிறது.

இயக்குனர் தயாரிப்பு நிறுவனம் என அனைத்தும் மாறினாலும் ஹீரோயின் மட்டும் மாறவில்லை என தெரிகிறது. நயன்தாரா மற்றும் சாய்பல்லவியின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version