Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தனுஷ், சிவகார்த்திகேயன் இடையேயான உறவு விரிசலுக்கு காரணம் இதுதானா!!

Is this the reason for the rift between Dhanush and Sivakarthikeyan!!

Is this the reason for the rift between Dhanush and Sivakarthikeyan!!

சமீப காலங்களில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் முன்னணி நட்சத்திரங்களாக உள்ளனர். சிவகார்த்திகேயனை 3 படம் மூலம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித் திரைக்கு அறிமுகப்படுத்தியவர் தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனும் ஆரம்பக் காலகட்டத்தில் சினிமா துறையில் பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். எனினும் அவரது விடாமுயற்சியினாலும், கடின உழைப்பினாலும் முன்னணி நட்சத்திரமாக வளர்ந்துள்ளார்.

தனுஷ் தற்போது சேகர் கம்முல்லா இயக்கத்தில் ‘குபேரா’ மற்றும் தனது இயக்கத்திலேயே ‘இட்லி கடை’ போன்றப் படங்களில் நடத்தி வருகிறார். இப்படங்களை முடித்த பின், “இளையராஜா பயோ பிக்”, மாரி செல்வராஜ் படம், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என பயங்கர பிசியாக உள்ளார். மேலும் பாலிவுட்டிலும், ஹாலிவுட்டிலும் கமிட் ஆகியுள்ளார். இவரது ஐம்பதாவது படமான “ராயனை”த் தொடர்ந்து ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தையும் இயக்கி முடித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன், தனுஷ் உறவு :

சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு 3 படம் மூலம் அறிமுகம் செய்தப் பின்னர் எதிர்நீச்சல் படத்தையும் தனுஷே தயாரித்து வெளியிட்டார். சில இயக்குனர்களிடம் சிவகார்த்திகேயனை அறிமுகம் செய்தும் வைத்தார். சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் ஆரம்பகட்டத்திற்காக தனுஷ் உதவிகள் செய்துள்ளார். எனினும், சிவகார்த்திகேயனின் காமெடி கலந்த நடிப்பு மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாக்கிக் கொண்டு முன்னணி நடிகர்களுள் ஒருவரானார்.

பின்னர் தனுஷ் தன் படத்திற்காக சிவகார்த்திகேயனை அழைத்த போது, அப்படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் கூறிய பட்ஜெட்டினால் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. ஒரு நிகழ்ச்சி மேடைகள் கூட சிவா, “எனக்கு வாழ்க்கை கொடுத்ததாக சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் ஒருபோதும் அவ்வாறு கூற மாட்டேன்” எனவும் சொன்னார். இதனைக் கேட்ட ரசிகர்கள் இவர் தனுஷை தான் குறிப்பிடுகிறார் எனவும் கமெண்ட் செய்தனர்.

இவ்விருவரும் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக நடனம் ஆடினார்கள்.
இது குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறும்போது, இருவரும் பொது இடத்தில் அவ்வாறு தான் நடந்து கொள்ள முடியும். அவர்களுக்கிடையே மோதல் இருப்பது உண்மைதான் என்றார்.

Exit mobile version