Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மு.க.ஸ்டாலின் அவர்களின் மனத்திருப்தி கான காரணங்கள்   இதுதானா?!

மு.க.ஸ்டாலின் அவர்களின் மனத்திருப்தி கான காரணங்கள்   இதுதானா?!

மு.க.ஸ்டாலின் இன்று சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை மற்றும் வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவச்சிலையை மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அவர் வருகையை ஒட்டி அவரது தொண்டர்கள் வெகு நேரமாக காத்துக் கொண்டிருந்தார்கள்.  வழியெங்கும் அவர் தொண்டர்கள் பூத்தூவி வரவேற்றனர்.கருணாநிதியின் சிலை மட்டும் 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. இதன் பீடம் 13 அரை அடி உயரம் அமைந்துள்ளது. மொத்தமாகவாயிலை 21 அடி உயரத்தில் கருணாநிதி சிலை பிரமாண்டமாக நேரில் அவரை பார்த்த உயிருள்ள மனிதனாக தெரிந்தது.

அண்ணா நுழைவு வாயிலையும் மற்றும் கருணாநிதியின் உருவ சிலையையும் திறந்து வைத்த பின்னர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதில் பேசிய அவர் கூறியதாவது மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைந்து கொண்டு செல்கிறது. அண்ணாவின் ஆசைகள், கலைஞரின் கனவுகளை நிறைவேற்றிய திருப்தி எனக்கு உள்ளது.என கூறினார்.

 

Exit mobile version