பீஸ்ட் படத்தில் இந்த பாடலா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!!

0
142

பீஸ்ட் படத்தில் இந்த பாடலா? ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் பீஸ்ட். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோரும இந்த படத்தில் நடித்துள்ளனர்.  இந்த திரைப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதி உள்ளதாகவும், இந்த பாடலை விஜய் பாடி உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் விரைவில் இந்த பாடல் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் முதல் பாடலை ரசிகர்களுக்கு அறிவிக்கும் வகையில் உருவான வீடியோவில் நடிகர் விஜய்யுடன் இயக்குனர் நெல்சன், இசை அமைப்பாளர் அனிருத் மற்றும் இவர்களுடன் நடிகர் சிவகார்த்திகேயனும் பங்கேற்றிருப்பதாக சொல்லப்படுகிறது.

பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்து உள்ளது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மாஸ்டர் படத்தில் கில்லி படத்தில் இடம்பெற்ற கபடி, கபடி பாடலை போன்று கில்லி படத்தின் அர்ஜுனரு பாடல் பீஸ்ட் படத்தில் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.