Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு…

 

 

நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு…

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிலியம் பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவானது கடந்த சில நாட்களாக அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மகாலட்சுமி அம்மனுக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்த கோடிகள் தெருகளில் நின்று வழிபட்டு வந்திருந்தனர்.

இந்தக் கோவிலில் பூசாரிகள் அமர்ந்திருந்த பொதுமக்களின் தலையில் தேங்காய்களை அப்பளத்தை நொறுக்குவது போல் தலையில் தேங்காய் உடைத்தனர். இந்த திருவிழாவில் கிராம மக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள மக்கள் மற்றும் வெளியூர்களில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமான வந்து குவிந்தனர். இந்த நேர்த்திக்கடனை இவர்களும் சேர்ந்து அம்மனுக்கு செலுத்தினர். இந்நிகழ்வால் ஏராளமானோர் பொதுமக்களோடு கலந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்களை செய்து வந்தனர். இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

Exit mobile version