Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதுதான் உங்கள் சமூக நீதியா? முதல்வருக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி கிராமத்தைச் சார்ந்த நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த அஸ்வினி எங்களுடைய வீட்டிற்கு முதலமைச்சர் வந்தார் எங்களுக்கு வீடு தருவதாகவும் 12 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாகவும், கூறினார்.

ஒன்றரை வருட காலங்கள் ஆன பிறகும் இன்னும் கடன் வழங்கவில்லை எனக் கூறியிருக்கிறார். அந்தப் பெண் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை தற்போது விடுத்திருக்கின்ற அறிக்கையில் விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டிடும் திமுக அரசு தேர்தலுக்கு முன்னர் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

தேர்தலுக்குப் பிறகு கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறது. இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவது தான் உங்களுடைய சமூக நீதியா தமிழக முதலமைச்சரே என்று தெரிவித்துள்ளார் அண்ணாமலை.

Exit mobile version