Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பல் எனாமல் தேய்ந்து பற்கூச்சம் ஏற்படுகிறதா? இதற்கு சிறந்த ஹோம் ட்ரீட்மென்ட் இதோ!!

பற்களை வெள்ளையாக வைத்துக் கொள்ள அதை அழுத்தி வேகமாக தேய்த்து பல் துலக்கும் பழக்கத்தை சிலர் கொண்டிருக்கின்றனர்.இதனால் பற்களின் மேலுள்ள எனாமல் தேய்ந்து விரைவில் பல் கூச்சம் ஏற்படுகிறது.

 

இந்த பல் கூச்சத்தால் உணவுகளை உட்கொள்ள முடியாமல் தவிர்க்கின்றனர்.இதனால் பல் எனாமலை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

 

பல் எனாமலை உறுதியாக்கும் வீட்டு வைத்தியம்:

 

1)தேங்காய் எண்ணெய்

 

தினமும் காலையில் ;பற்களை துலக்கிய பிறகு தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி நன்கு கொப்பளித்தால் பல் கூச்சம் சரியாகும்.

 

2)கொய்யா இலை

 

பல் எனாமல் வலிமையாக்கும் ஆற்றல் கொய்யா இலைக்கு உண்டு.இரண்டு கொய்யா இலையை சுத்தம் செய்து வெறும் வாயில் மென்று சாப்பிட்டு வந்தால் எனாமல் கரையாமல் இருக்கும்.

 

3)பூண்டு பற்கள்

 

பற்களில் உள்ள அழுக்குகளை அகற்ற பூண்டு பயன்படுத்தப்படுகிறது.அதேபோல் பல் எனாமலை பாதுகாக்கவும் பூண்டு பயன்படுத்தலாம்.

 

இரண்டு பல் வெள்ளைப்பூண்டை தோல் நீக்கிவிட்டு இடித்து பற்களை தேய்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 

4)புதினா இலை

 

பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள புதினா இலை உதவுகிறது.சிறிதளவு புதினா இலை எடுத்து வெயிலில் நன்கு காயவைத்து பொடியாக்கி பேஸ்ட்டில் கலந்து பல் துலக்கி வந்தால் பல் கூச்சம் சரியாகும்.

 

5)கல் உப்பு நீர்

 

ஒரு கிளாஸ் நீரை சூடாக்கி சிறிது கல் உப்பு கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் சரியாகும்.

 

6)கிராம்பு எண்ணெய்

 

பல் ஈறுகளில் கூச்சம் இருந்தால் கிராம்பு எண்ணெயை கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் எனாமல் தேய்மானம் ஆகாமல் இருக்கும்.

Exit mobile version