அடுத்த ‘விக்கேட்’ என குறிப்பிட்டது டிடிவி தினகரனையா??
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் எந்தெந்த கட்சிகள் யார்யாருடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட போகிறது என்ற பரபரப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.
அந்த வகையில் தற்பொழுது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் அமமுக கடசி டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியள்ளனர் என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
அவர்களது தொலைபேசி உறையாடலில் தொகுதி பங்கிடு குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் அமமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை மேலும் ஒரு விக்கேட் விழும் என்று கூறியது இந்த கூட்டணி செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.