தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை4,5 நாட்களிலே பாரதிய ஜனதா கட்சி தெரிவிக்கும் என்று நடிகை குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டசபை தொகுதியில் பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் நடிகை குஷ்பு. புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து இருக்கின்றார். அதன்பிறகு பொதுமக்களை சந்தித்து பாஜக விற்கு ஆதரவும் கேட்டு இருக்கிறார்.
இதனை தொடர்ந்து, பத்திரிகையாளர்களை சந்தித்த குஷ்பு அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணியில் இருக்கிறது தேவையில்லாமல் குழப்பம் ஏற்படுத்த வேண்டாம். முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைமை தான் முடிவு செய்யும் அதுதான் மரபு, முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான சர்ச்சை இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதோடு பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதைப் போல ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி தலைமை வாய்ப்பு கொடுத்தால் எந்த தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கின்றேன். சட்டசபை தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிடுவதற்கு உதயநிதி ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியிருக்கிறார்.