உடலில் பியூரின்கள் உடையும் பொழுது உருவாகும் இரசாயனம்தான் யூரிக் அமிலம்.இந்த பாதிப்பு ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது.உடலில் உருவாகும் யூரிக் அமிலம் நமது சிறுநீர் வழியாக வெளியேறுவது வழக்கம்.
அப்படி இருக்கையில் யூரிக் அமிலத்தின் அளவு அதிமானாலோ அல்லது சிறுநீரகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ யூரிக் அமிலம் வெளியேற முடியாமல் தேங்கிவிடும்.இதன் காரணமாக மூட்டு வலி,சிறுநீரக கல்,கீல்வாதம் போன்ற பாதிப்புகள் உருவாகும்.
உடலில் யூரிக் அமில அளவு அதிகமானால் ஏற்படும் பாதிப்புகள்:
1)மூட்டு மற்றும் கணுக்கால் பகுதியில் வீக்கம் ஏற்படுதல்
2)சிறுநீர் கழிக்கும் பொழுது வலி,எரிச்சல் உண்டாதல்
3)சிறுநீர்ப்பை வீக்கம் அதிகரித்தல்
4)இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுதல்
5)உயர் இரத்த அழுத்த பாதிப்பு ஏற்படுதல்
6)இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டை மீறி அதிகரித்தல்
7)கல்லீரல் சம்மந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படுதல்
யூரிக் அமில அளவை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் இதனுடன் சிலவகை உணவுகளை உட்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
யூரிக் அமிலத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்:
1.பாகற்காய்
கசப்பு காயான பாகற்காயில் நார்ச்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது.இந்த காயை உணவாக எடுத்துக் கொண்டால் யூரிக் அமிலத்தின் அளவு குறையும்.
2.வெந்தயம்
தினமும் காலையில் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் யூரிக் அமிலத்தின் அளவு கட்டுப்படும்.
3.வெள்ளரி
இந்த காயை ஜூஸாக சாப்பிடுவதால் யூரிக் அமிலத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.அதேபோல் பேரிக்காய் சாப்பிடுவதால் யூரிக் அமிலம் குறையும்.பேரிக்காயில் இருக்கின்ற நார்ச்சத்து யூரிக் அமில அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.
4.கேரட்
தினமும் ஒரு பச்சை கேரட் சாப்பிட்டு வந்தால் உடலில் யூரிக் அமில அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.முழு தானிய உணவுகளை சாப்பிட்டால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.
5.க்ரீன் டீ
காலை நேரத்தில் ஒரு கிளாஸ் க்ரீன் டீ செய்து பருகினால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.அதேபோல் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் பருகினால் உடலில் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தால் யூரிக் அமில அளவு கட்டுப்படும்.