Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆர் எஸ் எஸ் அமைப்பை தமிழக அரசும் திமுகவின் கூட்டணி கட்சிகளும் எதிர்ப்பதின் உள்நோக்கம் என்ன?

வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தியடிகளின் பிறந்த நாளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஊர்வலத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. அந்த அமைப்பு அரசியல் கட்சி அல்ல அதற்கு மதவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் மீது அரசுக்கு எழும் பயத்தில் நியாயம் உள்ளது.

ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இடதுசாரி கட்சிகளும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அதே நாளில் நடத்தவிருந்த மனித சங்கிலி போராட்டத்திற்குத் தடை விதித்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் அதற்கு பின்வருமாறு காரணங்களை தெரிவிக்கிறது காவல்துறை.

மத்திய அரசு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற அமைப்பு தடை செய்யப்பட்ட சூழ்நிலையில், அதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் கண்டனங்களும், ஆர்ப்பாட்டமும் நடத்தி வருகின்றன. மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கண்காணிப்பதற்கு காவல்துறையினர் முழுவீச்சில் இரவு பகலாக எல்லா இடங்களிலும் ஒன்றிணைந்து ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், இருக்கிறார்கள்.

ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புகளின் ஊர்வலம் மற்றும் கூட்டங்களும் அனுமதிக்க முடியாது என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று தமிழக அரசு தெரிவித்திருக்கும் காரணம் ஏற்கத்தக்கதாக உள்ளது. ஏனென்றால் அவை இரண்டும் தேர்தலில் பங்குபெறும் அரசியல் கட்சிகள் அல்ல, ஆனால் சிபிஐ சிபிஎம் விடுதலை வேஷ்டிகள் காட்சி உள்ளிட்ட கட்சிகள் தேசிய மற்றும் மாநில அளவிலான அரசியல் கட்சிகள் ஆகும்.

இந்த மூன்று அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து அறிவித்திருந்த சமூக நல்லிணக்கம் மணி தசங்களை போராட்டத்திற்கு, என்னுடைய தோழமைக் கட்சிகளான மதிமுக, மமக, தவாக, எஸ்டிபிஐ, சிபிஐ என பத்துக்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளும் தி.க, தி.வி.க உள்ளிட்ட சமூக இயக்கங்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதாவது இந்த போராட்டம் முற்றிலுமாக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்துவதாகும் ஆகவே இதனை மதம் சார்ந்த அமைப்புகளின் நடவடிக்கைகளுடன் ஒப்பீடு செய்வதும், அனுமதி மறுப்பதும் ஏற்புடையதாக இல்லை.

மதவெறி பாசிச ஆர்.எஸ். எஸ் அமைப்புடன் ஜனநாயக வழியில் மக்களுக்கு பணிபுரியும் அரசியல் கட்சிகளை ஒப்பீடு செய்வது வேதனைக்குரியதாகும். என்று தெரிவித்துள்ளார் திருமாவளவன்.

ஆகவே காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி நடைபெற உள்ள எம்முடைய சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

ஆனால் தமிழக அரசு மறைமுகமாக திருமாவளவன் உள்ளிட்டோரின் பின்னாலிருந்து ஆர் எஸ் எஸ் அமைப்பு நடத்தவிருக்கும் அணிவகுப்பை தடுத்து நிறுத்த முயற்சிக்கிறதா? என்ற கேள்வியும் எழுக்கிறது.

ஏனென்றால் திமுகவின் அரசியல் சித்தாந்தமே கடவுள் மறுப்பு கொள்கை பெரியார் மண் உள்ளிட்ட கொள்கைதான். ஆனால் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்திற்கு நுழைந்து விட்டால் கடவுள் மறுப்பு கொள்கை என்ற ஒரு கொள்கையை தமிழகத்தில் இல்லாமல் போய்விடும்.

அப்படி திமுகவின் மிகப்பெரிய ஆயுதமான கடவுள் மறுப்பு கொள்கை தமிழகத்தில் சற்றும் இல்லாமல் போய்விட்டால் திமுக காலகாலத்திற்கும் அரசியல் செய்யவே முடியாது.

ஆகவே தான் மறைமுகமாக திருமாவளவன் உள்ளிட்டோரை போராட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட செய்து தமிழக அரசு அதனை தடை செய்ய நினைப்பதை போல அத்துடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தவிருக்கும் அணிவகுப்புக்கும் தடை விதிக்க முயற்சிக்கிறதா? என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

திமுகவைப் பொறுத்த வரையில் இந்த கடவுள் மறுப்பு கொள்கை தான் அந்த கட்சியின் ஆணிவேராக விளங்கி வருகிறது. ஒரு வேலை தமிழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கை இல்லை என்றாகி விட்டால் நிச்சயமாக தமிழகத்தை பொறுத்தவரையில் திமுக காணாமல் போவதற்கான வாய்ப்புண்டு.

திமுகவிற்கு அப்படி ஒரு நிலை வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் தமிழக அரசும் முயற்சித்து வருகிறது. அதேபோல அதன் கூட்டணி கட்சிகளான திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகளும் முயற்சி செய்து வருகின்றன.

ஆர் எஸ் எஸ் அமைப்பு என்பது ஒரு தேசபற்று மிக்க அமைப்பு என்பது அனைவருக்கும் தெரிந்தாலும் கூட அது இந்துத்துவா கொள்கை கொண்டிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக அந்த அமைப்பை தமிழக மக்களிடையே ஒரு மதவாத அமைப்பாக சித்தரித்து வைத்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் இந்த கடவுள் மறுப்பு கொள்கைக்கு நேர் எதிரான ஒரு அமைப்பு உண்டு என்றால் அது ஆர்எஸ்எஸ் அமைப்பு தான். தமிழகத்தை பொறுத்தவரையில் கடவுள் மறுப்பு கொள்கையை வைத்து மிகப்பெரிய அரசியல் காலாகாலமாக நடைபெற்று வருகிறது.

அப்படி இருக்கையில் கடவுள் நம்பிக்கை மிக்க இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தமிழகத்திற்கு நுழைந்தால் அது நிச்சயமாக கடவுள் இல்லை என்று தெரிவிப்பவர்களுக்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆகவே தான் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு பேரணி நடத்துவது பலரின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

Exit mobile version