Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தளபதி விஜயின் மதுர படத்தின் ஹீரோயினா இவங்க? ஆளே அடையாளம் தெரியல!

எலந்த பழம் எலந்த பழம் உனக்கு தான், சாணக்யா சாணக்யா ஏதோ தந்திரம் செய்தாய் என்று அந்தப் பாடல்களில் வரும் நடிகை ரக்ஷிதா ரசிக்காதவர்கள் இருக்க முடியாது 90கிட்ஸ் மிகவும் பிரபலமானவர் நடிகை ரக்ஷிதா.

விஜய் மற்றும் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் இவர். இவரை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட மாட்டார்கள். இவரின் இந்த இரண்டு பிரபலமான பாடல்கள் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இவர் தமிழ் படங்களில் அதிகமாக நடக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் அவர் பிரபல கன்னட இயக்குனர் பிரேம் என்பவரை கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இப்பொழுது அவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார்.

பெங்களூரில் குடும்பத்தோடு வசித்து வரும் ரக்ஷிதா தற்போது கன்னட படங்களில் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் தயாரிக்கவும் செய்கிறார்.

எக் லவ் யா என்ற கன்னட படத்தை ரக்ஷிதா தன்னுடைய ரக்ஷிதா பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து வருகிறார். அந்த படத்தில் ரஞ்சிதாவின் தம்பி ரானா தான் ஹீரோ என்று சொல்லப்படுகிறது . இந்த படத்தில் இவரும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கொரோனா வைரஸ் நோய் தீவிரமான இருந்த நிலையில் படப்பிடிப்புகள் மீண்டும் துவங்கியுள்ளது. மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்ட சந்தோஷத்தில் செல்பி எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக அவரைக் காணாத தமிழ் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்ததும், அவரது முகம் அடையாளம் தெரியாமல் மாறி விட்டதை பார்த்து அதிர்ந்து உள்ளார்கள். ஏன் தமிழ் படங்களில் நடிப்பதில்லை என்று ஒரு சிலர் கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.

Exit mobile version