Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!!

#image_title

நீங்கள் பிறந்த மாதம் புரட்டாசியா? அப்போ இந்த குணங்கள் கொண்டவர்களாக இருப்பீர்கள்!!

சிறந்த தமிழ் மாதங்களில் ஒன்று புரட்டாசி.பெருமாளை வழிபடுவோர் இந்த மாதத்தில் அசைவம் உண்ண மாட்டார்கள்.இந்த மாதம் பெருமாள்,விஸ்ணு ஆகிய கடவுளை தரிசம் செய்ய உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது.இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெருமாள் திருக்கல்யாணம் வைபவம் நடைபெறுவது வழக்கமான ஒன்று. இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் குணத்தில் சிறப்பானவர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

*புனித மாதமான புரட்டாசியில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலி தனத்தோடு எதிலும் செயல்படுவார்கள்.

*ஜோதிடம் படி புதனின் வீடான கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் புரட்டாசி.இதன்படி பார்த்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் நிறைய நல்ல செயல்களை எளிதில் கற்றுக் கொள்ள கூடியவர்களாக இருப்பார்கள்.

*இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிவு மற்றும் செல்வ வளம் மிகுந்து காணப்படும் நபர்களாக இருப்பார்கள்.

*படிப்பை பொறுத்தவரை இந்த புரட்டாசியில் பிறந்தவர்கள் படு சுட்டியாக இருப்பார்கள்.அனைத்து வித நூல்களையும் விரைவில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக திகழ்வார்கள்.

*எந்த ஒரு காரியத்தையும் சரியாக செய்ய கூடியவர்களாவும்,பொறுமை காப்பவர்களாகவும் இருப்பார்கள்.

*இவர்களிடம் எந்த ஒரு ஒளிவு மறைவும் இன்றி நேர்மையாக பேசுபவர்களாக விளங்கும் இவர்களை பலரும் பகைத்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது.காரணம் உண்மையை சொன்னால் யாரும் விரும்புவது இல்லை என்பது தான்.

*கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்கும் நபர்களாக திகழ்வார்கள்.வீட்டில் செல்வம் சேர முயற்ச்சி மேற்கொள்வார்கள்.

*இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க உத்தியோகம் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.காவல்,தீயணைப்பு துறை,ராணுவ துறை சம்மந்தபட்ட வேலைகளில் சேர வழி பிறக்கும்.

*புத்திசாலித்தனம் நிறைந்து காணப்படும் இவர்கள் மூளையை உபயோகித்து அனைத்து விஷயங்களிலும் வெற்றி காண்பார்கள்.

*கற்பனை சக்தி மிகுந்து காணப்படும் இவர்கள் பத்திரிகைதுறை மற்றும் கலைத்துறையில் சாதிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.

*இந்த புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் விட்டுக்கொடுக்கும் குணம் கொண்டவர்களாகவும், நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்களாக விளங்குவதால் இவர்களை சுற்றி அதிக நண்பர்கள் வட்டாரங்கள் எப்பவும் இருக்கும்.

Exit mobile version