உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு உள்ளதா!! சரியாக இதை செய்யுங்கள்!!

0
142
#image_title

உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு உள்ளதா!! சரியாக இதை செய்யுங்கள்!!

நம் உடலில் கால்சியம் பற்றாக்குறையால் கை, கால், முழங்கால் வலி ஏற்படும். இதனை தவிர்க்க நம் அன்றாட உணவில் போதுமான கால்சியம் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது அவசியமாகிறது.

உடலில் கால்சியம் பற்றாக்குறை இருந்தால் எலும்புகள் வலுவிழந்து வலியை உணர வைக்கும். வயது ஏற ஏற, கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன.

கால்சியம் சத்து குறைவாக இருந்தால் அவ்வபோது தசைபிடிப்பு ஏற்படும். குறிப்பாக, நீங்கள் தூங்கும் சமயத்திலும் கூட தசைப்பிடிப்பு ஏற்படக் கூடும். சில சமயங்களில் உடல் பாகங்களில் மிகுந்த வலி இருக்கும்.

எளிதில் கிடைக்கக்கூடிய கால்சியம் உள்ள பொருட்கள்:

1. அத்திப்பழம்

2. பால்

3. பீன்ஸ்

4. கொய்யாக் காய்

5. பப்பாளி

6. கீரைகள்

7. முட்டை

8. மீன்

9. பாதாம்

10. ஆரஞ்சு

இந்த வகையான உணவுப்பொருட்களை நம் அன்றாட வாழ்வில் உட்கொள்ளும் பொழுது கால்சியம் அளவு குறையாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

கால்சியம் உள்ள உணவுகளை சரியான அளவில் சரியான நேரங்களில் உட்கொள்ளும் பொழுது கால்சியம் குறைபாட்டை தடுக்க முடியும்.

இதில் ஏதேனும் இரண்டு அல்லது மூன்று பொருட்களை நம் அன்றாட வாழ்வில் தினசரி சாப்பிட்டால் கால்சியம் பிரச்சனை வராது.