உங்கள் குழந்தைக்கு 1௦ வயது ஆகிவிட்டதா?? மாதம் 1௦௦௦ ரூபாய் முதல் எதிர்கால சேமிப்பை இன்றே துவங்குங்கள்!!  

0
139
Is your child 10 years old? Start your future savings from Rs 10 per month today !!

உங்கள் குழந்தைக்கு 1௦ வயது ஆகிவிட்டதா?? மாதம் 1௦௦௦ ரூபாய் முதல் எதிர்கால சேமிப்பை இன்றே துவங்குங்கள்!!

இந்த காலத்தில் ஒவோரு தனிநபரும் எதிர்காலத்திற்காக பணம் சேர்த்து வைப்பது அவசியமகி உள்ளது. எதிர்கால திட்டம் என்று சொல்லும் பொழுது நம் அனைவருக்கும் முதலில் நினைவில் வருவது எல்ஐசி தான். ஆம்  எதிர்கால திட்டத்திற்காக முதல் பங்கு வகிப்பது எல்ஐசி இன்சூரன்ஸ் தான். மக்களுக்கும் இந்த திட்டத்தின் மீது பெரும் நம்பிக்கையே உள்ளது என்று தான் கூற வேண்டும். 1௦௦ இல் 75 சதவிகித மக்கள் இந்த திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் மக்களுக்கு எவ்வளவு நம்பிக்கை இருக்கிறதோ அதே போல் தபால் அலுவலகத்தின் ஸ்கீம்கள் மீதும் அவ்வளவு நம்பிக்கை இருக்கிறது. ஆம் நம்மில் சிலருக்கு இதைப்பற்றிய தகவல் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. அது என்ன வென்றால் போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்புகளால் கிடைக்கும் ஆதாயம் தான்.

முதலில் தபால் நிலையத்தில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்பது உண்மை. இதையறிந்து மக்கள் எம்ஐஎஸ் என்ற மாதாந்திர முதலீட்டு திட்டம் அதாவது Post Office Monthly Income Scheme என்ற திட்டத்தில் அதிகளவில் சேர்ந்து பயன்பெற்று உள்ளனர். இத்திட்டத்தில் மாதம் ஒரு முறை முதலீடு செய்ய வேண்டும்.  அதன் மூலம் வட்டியைப் பயன்படுத்திக் கொள்ளளாம். மேலும் உங்களின் குழந்தைகளுக்கு 10 வயது அல்லது அதற்கு மேலாக இருந்தால் அவர்களின் பெயரில் இந்த எம்ஐஎஸ்  சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். மேலும் 10 வயதுக்குக் குறைவாக இருக்கும் குழந்தைகள்  என்றால் அவர்களின் பெற்றோர்களின் பெயரில் கணக்கை ஆரம்பிக்கலாம். இந்த கணக்கு அருகில் உள்ள எந்த ஒரு தபால் நிலையத்திலும் சென்று திறக்கலாம்.

குறைந்தபட்சமாக மாதம் .1000 ரூபாய் மட்டுமே செலுத்தி துவங்கலாம். அதிக பட்சமாக 4.5 லட்சம் ரூபாய் வரை செலுத்தலாம். மேலும் இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 6.6% வட்டி வழங்கப்படும். இந்தத் திட்டம் 5 ஆண்டுகளில் முதிர்வு பெற்றுவிடும். முக்கியமாக இந்த கணக்கை இரண்டு அல்லது மூன்று பேர் சேர்ந்து கூட்டாகத் தொடங்கலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம் ஆகும். எம்ஐஎஸ் என்ற மாதாந்திர முதலீட்டு திட்டத்தில் இணைய விரும்புவோர்கள் தங்களின் அடையாள அட்டை, முகவரிச் சான்று, பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள்  இரண்டு ஆகியனவற்றுடன் 1,000 ரூபாய் செலுத்தி அருகிலுள்ள அஞ்சலகத்தில் கணக்கைத் திறக்கலாம்.