உங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

0
165

உங்களின் முழங்கை கருப்பாக உள்ளதா? உடனடியாக இதனை மட்டும் செய்து பாருங்கள்!

அனைத்து பெண்களும் அவரவர்களின் அழகில் கவனம் செலுத்துவது வழக்கம்தான். பெரும்பாலான பெண்களுக்கு முழங்கை கருமையாக இருப்பது இயல்பு.அதனை நீங்கி வெள்ளையாக மாற என்ன செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் 1/2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் பின்பு அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து அந்த நீரை முழங்கையில் தடவி 10 முதல்15 நிமிடம் வரை ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும்.

மேலும் இவ்வாறு தினந்தோறும் செய்து வந்தால் அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி விரைவில் முழங்கையானது வெள்ளையாகும். அதனை அடுத்து முழங்கை கருமை மறைய பேக்கிங் சோடாவை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முழங்கையில் தடவி சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.இதனால் அப்பகுதியில் உள்ள கருமை மறையும்.

மேலும் முழங்கையில் உள்ள கருமை மறைய ஆரம்பிக்க,முழங்கை மென்மையாக இருக்க ஒரு பவுலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முழங்கையில் தடவி 15 நிமிடம் முதல்20 நிமிடம் வரை ஊற வைத்து பின் துடைத்து எடுக்க வேண்டும்.இதனால் முழங்கையில் வறட்சி நீங்கி முழங்கை மென்மையாக இருக்கும்.மஞ்சள் தூளை தேன் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து முழங்கையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் சிறிது நீரால் முழங்கையை 2 நிமிடம் தேய்த்து கழுவ வேண்டும்.