முகத்தில் மங்கு வந்துவிட்டதா? வடித்த கஞ்சியை இப்படி பயன்படுத்தினால் ஒரே நாளில் மறைந்துவிடும்!!

0
93
Is your face dull? If you use strained porridge like this, it will disappear in a day!!

முக கன்னங்களில் மங்கு அதாவது கருப்பு படைகள் வருவதால் அழகு பாழாகிறது.ஹார்மோன் பாதிப்பு,மாதவிடாய் கோளாறு போன்ற காரணங்களால் மங்கு விழுகிறது.இந்த மங்குவை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எளிதில் மறைய வைத்துவிடலாம்.

மங்குவை மறைய வைக்கும் வீட்டு வைத்தியங்கள்:

1)பசும் பால் – ஒரு கிளாஸ்
2)வில்வமர காய் – ஒன்று

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் வில்வ மர காயை வாங்கி வாங்கி பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இல்லையேல் வில்வக்காய் பொடியை வாங்கிக் கொள்ளலாம்.

பிறகு ஒரு கிண்ணத்தில் காய்ச்சாத பசும் பால் இரண்டு தேக்கரண்டி ஊற்றி வில்வக்காய் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்து கலந்துவிடவும்.

இதை முகத்தில் உள்ள மங்கு மீது பூசி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.இதுபோல் தினமும் செய்து வந்தால் மங்கு சீக்கிரம் மறைந்துவிடும்.

1)கசகசா – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒரு கிளாஸ்

மிக்சர் ஜாரில் 10 கிராம் கசகசா சேர்த்துக் கொள்ளுங்கள்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி பசும் பால் சேர்த்து மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை மங்கு மீது தடவி சிறிது நேரம் உலரவிட்டு பிறகு முகத்தை கழுவவும்.இந்த கசகசா பேக்கை வாரத்தில் மூன்று தினங்களுக்கு உபயோகித்து வந்தால் மங்கு மறைந்துவிடும்.

1)சாதம் வடித்த நீர் – ஒரு கப்
2)வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி
3)கஸ்தூரி மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி

சாதம் வடித்த கஞ்சியை ஒரு பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.கஞ்சியை நன்கு ஆறவிட்டு பயன்படுத்த வேண்டும்.

கஞ்சியில் ஒரு தேக்கரண்டி வெண்ணெய்,1/2 தேக்கரண்டி கஸ்தூரி மஞ்சள் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பிறகு இதை முகத்தில் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு காயவிட வேண்டும்.அதன் பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவினால் மங்கு பாதிப்பு மறைந்துவிடும்.அடிக்கடி முகத்தை கண்ணாடியால் பார்த்து அழகை பராமரிக்க வேண்டும்.முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.