Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்களுக்கு முதல் குழந்தை பெண் குழந்தையா..?? அப்போ அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்..!!

திருமணம் ஆகி ஒரு வருடத்திற்குள்ளாக குழந்தை பாக்கியம் வேண்டும் என்பதற்காக பெரும்பாலான மக்கள் ஒரு வருடத்துக்குள்ளாகவே குழந்தையை பெற்றெடுத்து விடுகின்றனர். அதிலும் முதல் குழந்தை ஆண் வாரிசாக தான் இருக்க வேண்டும் என விரும்புவர்கள் தான் இந்த உலகில் அதிகம். ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறப்பதை காட்டிலும், பெண் குழந்தையாக பிறப்பது தான் அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என ஜோதிடம் ரீதியாக கூறப்படுகிறது.

முதல் குழந்தை பெண் குழந்தையாக பிறந்து, இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையாக பிறந்தால் அனைத்து விதத்திலும் அந்த இரண்டு குழந்தைகளுக்கும் நன்மைகள் உண்டாகும் என கூறப்படுகிறது. அதாவது முதல் குழந்தை பெண் குழந்தையாக ஒரு குடும்பத்தில் பிறந்தால் அந்த குடும்பத்திற்கே அதிர்ஷ்டம் என்று கூறப்படுகிறது.

முதல் குழந்தை பெண் குழந்தையாகவும் இரண்டாவது குழந்தை ஆண் குழந்தையாகவும் பிறந்தால், அந்த இரண்டு குழந்தைகளுக்கும் அவரவர் வயதிற்கு ஏற்ற நன்மைகள் நடைபெறும். அதாவது படிப்பு, வேலை, திருமணம், வாழ்க்கை ஆகிய அனைத்தும் அவரவர் வயதுக்கு ஏற்ப சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. இரண்டு குழந்தைகளது வாழ்க்கையிலும் எந்த ஒரு பிரச்சனையும் அவ்வளவு பெரிதாக ஏற்படாது என்றும் கூறப்படுகிறது.

ஆனால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறந்து இரண்டாவது குழந்தை பெண் குழந்தையாக பிறந்தால், அவ்வளவு சிறப்பாக இருக்காது என்று கூறப்படுகிறது. அதாவது முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறந்தால் அதிர்ஷ்டம் என்பது குறைவாகத்தான் இருக்கும்.

அந்த ஆண் குழந்தையின் ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது பலமாக இருக்காது.அந்த ஆண் குழந்தை படிக்கும் பொழுதே வேலைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படலாம். வளர்ந்த பிறகு பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என பலவிதமான நெருக்கடிகள் உருவாகும்.

செல்வ வளம் என்பது தாராளமாக இருந்தால் இந்த கடமைகளை பார்த்து பயப்பட தேவையில்லை. ஆனால் இவர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்பது பலமாக இருந்தால் மட்டுமே செல்வ வளம் அதாவது தொழிலும் நன்றாக அமையும் இல்லை என்றால் செல்வ வளம் குறைவாகத்தான் இருக்கும்.

இதனால் அவர்களது கடமைகளை செய்வதிலும் கூட பல இன்னல்கள் உருவாகும். இவர்களது வாழ்க்கையில் எந்த ஒரு பலன்களும் மிகவும் தாமதமாகவும், மெதுவாகவும் தான் கிடைக்கும். 100 ல் 20 சதவிகித ஆண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த பிரச்சனை இருக்காது. ஏனென்றால் அவர்களது ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக இருக்கலாம்.

ஆனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலமாக இல்லாத அதாவது 100 ல் 80 சதவீதம் ஆண் குழந்தைகளுக்கு இந்த நிலைமைதான் ஏற்படும். எனவே முதல் குழந்தை ஆண் குழந்தையாக பிறந்திருந்தால் அந்த ஆண் குழந்தையின் ஜாதகத்தை பார்த்து, அவர்களது வாழ்க்கையில் எது பிரச்சினையாக அமையும் என்பதை தெரிந்து கொண்டு அதற்கான பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

அதாவது முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருந்தால் அந்த குழந்தையின் ஜாதகத்தில் கல்வி, தொழில், திருமணம், வாழ்க்கை, நிலம் வாங்குவது, வீடு வாங்குவது இது போன்றவைகளில் எது பிரச்சினையாக வரும் என்பதை தெரிந்து கொண்டு, அதற்கான பரிகாரத்தை செய்து கொள்வதன் மூலம் அந்த ஆண் குழந்தைக்கு அவ்வளவாக பிரச்சனைகள் ஏற்படாது.

யோகங்கள் அமைகின்ற காலத்தை அறிந்து அந்தந்த யோகத்திற்கு ஏற்ப பலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.ஆனால் ஒரு குடும்பத்தில் பெண் குழந்தை முதல் குழந்தையாக பிறந்தால், அந்தக் குடும்பத்தில் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் குடும்பம் முன்னேற்றம் அடையும்.

Exit mobile version