Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முன் நெற்றி முடி ஏறிக் கொண்டே செல்கிறதா? கவலையை விடுங்கள் இந்த எண்ணெய் ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்!!

#image_title

முன் நெற்றி முடி ஏறிக் கொண்டே செல்கிறதா? கவலையை விடுங்கள் இந்த எண்ணெய் ஒரு சொட்டு அங்கு தடவுங்கள்!!

இன்று பெரும்பாலானோருக்கு முன் நெற்றி முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், உணவுமுறை மாற்றம். பெண்களில் பலருக்கு கூந்தல் நீளமாக இருக்கும். ஆனால் முன் நெற்றி பகுதியில் முடி இன்றி பொளக்கமாக இருக்கும். ஆண்களுக்கு அவை வழுக்கையாக மாறி விடும். இந்த முன் நெற்றி முடி உதிர்வை சரி செய்ய கெமிக்கல் பொருட்களை தலைக்கு பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்கவும்.

இந்த முன் நெற்றி முடி உதிர்தல் பிரச்சனைக்கு உரிய வீட்டு வைத்திய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

*தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர்
*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
*வெந்தயம் – 1 தேக்கரண்டி
*வெட்டி வேர் – 1/2 கைப்பிடி அளவு

அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து அதில் 1/2 லிட்டர் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சி ஆற விடவும்.

பின்னர் 1/2 கைப்பிடி அளவு வெட்டி வேரை தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊறவிட்டு
தினமும் முன் நெற்றி பகுதியில் தடவி வந்தால் புதிதாக முடி வளரும்.

Exit mobile version