Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் குடல் சுத்தமாக இல்லையா?? நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம் ஜாக்கிரதை!!

உங்கள் குடல் சுத்தமாக இல்லையா?? நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம் ஜாக்கிரதை!!

குடலை ஏன் சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் காலையில் மோசன் போறோம். அப்புறம் ஏன் தனியாக சுத்தம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஆனால் எத்தனை பேர் முழுமையாக கழிவுகளை வெளியேற்றி விட்டோம் என்று உணர்வீர்கள் என்று கேட்டால் 70 – 80% இல்லை என்று தான் பதில் வரும்.

 

குடல் சுத்தமாக இல்லை என்றால் பல நோய்கள் ஏற்படுகின்றன. இதன் அறிகுறிகள், உடல் வலி, நமது உடலில் அதிக கழிவுகள் சேர்ந்தது போன்ற உணர்வு, வாயு தொல்லை அதிகம் வரும். மலச்சிக்கல், வயிறு ஊதி கொண்டு இருப்பது போல் அறிகுறி மீண்டும் மீண்டும் வரும் சளி தொந்தரவு, மருந்துகள் சாப்பிட்டோம் சரியாக தாமதமாகும் தோல் நோய், அடிக்கடி தொழில் அரிப்பு ஏற்படுவதும் நமது குடலில் கழிவுகள் சேர்ந்திருப்பதால் தான்.

 

இதை மட்டுமல்லாமல் நிறைய உடற்பயிற்சி வாக்கிங் செய்தும் உடல் எடை குறையாமல் போவதற்கும் குடலில் கழிவுகள் சேர்ந்து இருப்பதே ஆகும். மேலும் அதிக கோபம் எரிச்சல் போன்ற உணர்வுகளினால் அதிகம் சத்தமிடுவது போன்றவைக்கும் காரணம் குடல் சுத்தமாக இல்லை என்பதுதான். இதற்கு என்ன தான் தீர்வு.

 

இதற்கு செய்ய வேண்டிய முதல் விஷயம் உணவுகளில் இருக்கக்கூடிய கழிவுகளை முழுமையாக வெளியேற்றக்கூடிய லிவர் ,கிட்னி, மண்ணீரல் இவை மூன்றும் சரியாக செயல்பட்டாலே நம் உடலில் இருக்கக்கூடிய குடலில் தங்கக்கூடிய கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

 

இது சரியாக செயல்பட நான் முதலில் செய்ய வேண்டிய விஷயம் நிறைய தண்ணீர் குடிப்பது ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்துவது அவசியம். காலையில் எழுந்த உடனே ஒரு டம்ளர் தண்ணீர் காலை உணவுக்கு முன்னால் ஒரு டம்ளர் தண்ணீர் காலை உணவு முடித்தவுடன் ஒரு மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் தண்ணீர் , இதே போல் மதியம் மற்றும் இரவு அடுத்து தூங்கும் முன் ஒரு டம்ளர் தண்ணீர் என பெண்கள் இரண்டே முக்கால் லிட்டர் தண்ணீரும் ஆண்கள் மூன்றே முக்கால் லிட்டர் தண்ணீரும் குடிக்கும்போது உடலில் உள்ள குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறும்.

குடல் நல்ல விதமாக சுத்தம் ஆகும்.

 

 

குடல் சுத்தம் இல்லை என நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் அளவாவது மோர் குடிக்க வேண்டும். இது நமது குடலை நன்றாக கழுவி விட்டது போன்று சுத்தமாக்கும். நமது குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து கழிவுகளை முழுமையாக வெளியேற்றக்கூடிய வேலையை மோர் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.

 

அடுத்து மூலிகை டீ இது சாதாரணமானது தான் வாத பித்த மற்றும் கபத்தினை சரி செய்யக்கூடிய காலையில் இஞ்சி டீ குடிப்பது , மதியம் சுக்கு டீ குடிப்பது, மற்றும் இரவில் கடுக்காயை பொடி செய்து வெந்நீரில் போட்டு குடிப்பது இதை தினமும் எடுத்து வந்தாலே நமது குடல் கழிவுகள் முழுமையாக வெளியேறி மலச்சிக்கல் இல்லாமல் நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும். உட்காந்து எழுந்திருக்க, காலை நீட்டி மடக்க சிரமமாக உள்ளது என வாத நோயினால் கஷ்டப்படுபவர்களுக்கு மூட்டு இணைப்புகள் சரியாக இயங்கும்.

 

அடுத்து காய்கறிகள் வெண்டைக்காய், பீர்க்கங்காய், அவரைக்காய், புடலங்காய், வெள்ளைப் பூசணி, சுரைக்காய், கத்தரிக்காய், முருங்கைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ இதைப் போன்ற நார்ச்சத்துள்ள நாட்டு காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டாலே நமது குடல் சுத்தமாகிவிடும். இதில் ஏதேனும் ஒரு காய்கறிகளை தினமும் 200 முதல் 250 கிராம் வரை சாப்பிடுமாறு பார்த்துக் கொள்வது நல்லது. அரைப்பதமாக வேகவைத்து அதில் மிளகுத்தூள் உப்பு போட்டு சாப்பிட்டாலே போதும் நமது குடல் சுத்தமாகும்.

 

அடுத்து நார்ச்சத்துள்ள பழங்கள் பப்பாளி, கொய்யா தினமும் எடுத்து வர குடல் சுத்தமாகும். இவை மட்டுமல்லாமல் ஒரு பானம் அதில் புதினா, வெள்ளரி எலுமிச்சை இவை மூன்றும் சேர்ந்து இருக்க வேண்டும். இவை மூன்றுமே கிட்னி லிவர், மண்ணீரல் மூன்றையுமே பலப்படுத்தக்கூடிய உணவுகள். வெள்ளரிக்காய் தோலுடன் சேர்த்து அரைத்து அதில் ஒரு கைப்பிடி புதினாவையும் சேர்த்து அரைக்க வேண்டும். இதனை ஜூஸ் போல் செய்து அதில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிய வேண்டும். இந்த பானத்தை தினமும் எடுத்துக் கொண்டாலே போதும் குடல் முழுமையாக சுத்தமாகும்.

 

குடல் முழுமையாக சுத்தமானால் நமக்கு நாம் சாப்பிடும் உணவு முழுமையாக செரிமானம் ஆகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். எந்த நோய்க்காக மருந்து எடுத்துக் கொள்கிறோமோ அந்த நோய் முழுமையாக கட்டுக்குள் வரும். அதற்கு இந்தப் பானம் முழுமையாக உதவி செய்யும்.

Exit mobile version