தலைமுடி அடர்த்தியாக இருக்க யாருக்கு தான் ஆசை இருக்காது.ஆனால் எல்லோருக்கும் அடர்த்தியான கூந்தல் வளருவதில்லை.உங்களின் கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வெட்டிவேர்,கருஞ்சீரகம் உள்ளிட்ட சில பொருட்களில் தயாரித்த மூலிகை எண்ணெயை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்..
1)வேம்பாளம்பட்டை
2)வெட்டி வேர்
3)உலர்ந்த செம்பருத்தி
4)கருஞ்சீரகம்
5)வெந்தயம்
6)விளக்கெண்ணெய்
7)தேங்காய் எண்ணெய்
8)உலர் நெல்லி
செய்முறை..
அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதனுள் ஒரு பாத்திரம் வைத்து டபுள் பாய்லிங் முறைப்படி எண்ணெய் காய்ச்ச வேண்டும்.
உள்ளே வைத்துள்ள பாத்திரத்தில் அரை லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் மற்றும் இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெய் சேர்த்து சூடாக்கவும்.எண்ணெய் நன்கு சூடானதும் 10 கிராம் அளவிற்கு வேம்பாளம்பட்டை,10 கிராம் வெட்டிவேர்,8 முதல் 10 உலர்ந்த செம்பருத்தி இதழ் சேர்த்துக் கொள்ளவும்.
அதன் பிறகு 5 முதல் உலர்ந்த நெல்லிக்காய்,ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகம் மற்றும் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் காய்ச்சவும்.சேர்த்த பொருட்கள் அனைத்தும் நன்கு கொதித்து எண்ணெய் நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
இதை நாள் முழுவதும் ஆற வைக்கவும்.பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் இந்த எண்ணெயை ஊற்றி மூடி போட்டு சேமித்துக் கொள்ளவும்.
இந்த மூலிகை எண்ணெயை தலை முடிகளின் வேர்களில் படும்படி தினமும் தடவி வந்தால் முடி உதிர்வு பாதிப்பு முற்றிலும் குறைந்துவிடும்.