உங்கள் வீட்டு FAN சூடான காற்றை வெளியேற்றுகிறதா? இதை செய்தால் AC போன்று ஜில் காற்று கிடைக்கும்!!
மனிதர்களால் காற்றின்றி வாழ்வே இயலாது.கோடை காலத்தில் சுவாசிக்க கூடிய காற்று மிகவும் சூடாக இருக்கும்.குறிப்பாக இரவு நேரத்தில் அதிகளவு வெப்பக் காற்று வெளியேறும்.இதனால் நிம்மதியாக சுவாசிக்கவும்,தூங்கவும் முடியாது.
இதற்காக தான் வீட்டில் AC,FAN போன்றவை பயன்படுத்தப்டுகிறது.ஆனால் பட்ஜெட் பிரச்சனையால் எல்லோராலும் AC வாங்க முடியாது.FAN 1000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது என்பதினால் மக்கள் இதை தான் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
FAN கோடை காலத்தில் தான் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினால் நாம் முதலில் செய்யக் கூடிய விஷயம் FAN ஆன் செய்வது தான்.ஆனால் கோடை காலங்களில் அதிலிருந்து சூடான காற்று வெளியேறி உடலை சூடாக்கும்.
எனவே எப்பொழுது FAN ஆன் செய்தாலும் குளிர்ந்த காற்று வெளியேற வேண்டும் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.
முதலில் வீட்டு ஜன்னலை திறந்து வைத்த பின்னர் பேனை ஆன் செய்யவும்.வீட்டு அறையில் இருக்க கூடிய காற்றை தான் FAN மறுசுழற்சி செய்து கொடுக்கிறது.வீட்டில் சூடான காற்று இருந்தால் FAN சூடான காற்றத்தை சுத்திகரித்து வெளியேற்றும்.எனவே வீட்டு ஜன்னல்,கதவுகளை திறந்து வைப்பதன் மூலம் வெளியில் இருந்து பிரஸ் காற்று வீட்டிற்குள் வரும்.
ஒரு காட்டன் துணியை ஈரமாக்கி ஃபேனுக்கு அருகில் தொங்க விடுவதன் மூலம் குளிர்ந்த காற்று கிடைக்கும்.தினமும் FAN-ஐ துடைத்து பராமரிக்க வேண்டும்.FAN-ஐ அதிக வேகத்துடன் சுழல வைக்கவும்.இவ்வாறு செய்வதன் மூலம் குளிர்ந்த காற்று வெளியேறும்.