Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

#image_title

நீங்கள் ஈட்டும் வருமானம் உங்கள்பணத் தேவையை பூர்த்தி செய்யவில்லையா..? அப்போ இந்த பரிகாரம் உங்களுக்கானது தான்!!

நமக்கு பணத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய காலத்தில் வீட்டு செலவுகளை பார்த்துக் கொண்டு சேமிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது.

சம்பாதிக்கும் பணம் ஏதோ ஒரு வழியில் செலவாகி விடுகிறது. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு நாம் சென்று விடுகிறோம். இதனால் பணப் பிரச்சனை விடாமல் நம்மை துரத்தத் தொடங்குகிறது. இவ்வாறு கடனில் சிக்காமல் பணப் பிரச்சனை ஏற்படாமல் இருக்க சில ஆன்மீக வழிகளை நாம் கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

தேவையான பொருட்கள்:-

வெற்றிலை, குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம்.

பரிகாரம் செய்யும் முறை…

ஒரு வெற்றிலை எடுத்து அதில் சிறிதளவு குங்குமப் பூ மற்றும் பச்சை கற்பூரத்தை வைத்து நன்கு மடித்திக் கொள்ளவும்.

இதை வீட்டில் உள்ள பணப் பெட்டியில் வைக்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் ஆகர்சனசக்தி உருவாக்கி பணத்தை ஈர்க்கும் தன்மை தானாக வந்து விடும். இதனால் அதிகளவு பணத்தை சேமிக்க முடியும். பணப் பெட்டியில் வைத்துள்ள வெற்றிலையை 10 நாட்களுக்கு ஒரு முறை அவசியம் மாற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் பண பிரச்சனை நீங்கி விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Exit mobile version