Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு அருவி போல் கொட்டுதா? இதை கட்டுப்படுத்தும் ட்ரிங்க் இதோ!!

பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.சிலருக்கு மாதவிடாய் காலத்தில் அதிக வயிறு பிடிப்பு மற்றும் வயிற்று வலி பிரச்சனை ஏற்படும்.சிலருக்கு குறைவான உதிரப்போக்கு பிரச்சனை இருக்கும்.இன்னும் சிலருக்கு அதிகப்படியான உதிரப்போக்கு பிரச்சனை இருக்கும்.

இந்த அதிகப்படியான உத்திரப்போக்கு பிரச்சனை இருப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை பானம் செய்து குடித்து பலன் பெறுங்கள்.

அதிக உதிரப்போக்கிற்கான காரணங்கள்:

**ஹார்மோன் ஏற்றத்தாழ்வு
**தைராய்டு பிரச்சனை
**கருப்பை சார்ந்த பாதிப்பு
**உடல் பருமன்

தேவையான பொருட்கள்:-

1)அதிமதுரம் – 20 கிராம்
2)அருகம்புல் – 20 கிராம்
3)அசோகப்பட்டை – 20 கிராம்

செய்முறை விளக்கம்:-

நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் அதிமதுரம்,அருகம்புல் மற்றும் அசோகப்பட்டை தலா 20 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றை ஒருமுறை வெயிலில் காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடராக்கி கொள்ள வேண்டும்.இந்த மூன்று பொருளும் பவுடர் பதத்திலும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கிறது.விருப்பம் உள்ளவர்கள் பொடி வடிவத்திலும் வாங்கி பயன்படுத்தலாம்.

இப்பொழுது இந்த பொருட்களை கொண்டு பானம் தயாரிக்க வேண்டும்.அதற்கு முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

பிறகு அரைத்த பொடி ஐந்து கிராம் அளவிற்கு சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பின்னர் இந்த பானத்தை கிளாஸிற்கு வடிகட்டி பருகினால் அதிகப்படியான மாதவிடாய் உதிரப்போக்கு பிரச்சனை சரியாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மருதம்பட்டை பொடி- 3 கிராம்
2)மாதுளம் பழத் தோல் பொடி – 3 கிராம்
3)வெள்ளி லோத்திரம் – 3 கிராம்
4)தண்ணீர் – 300 மில்லி

செய்முறை விளக்கம்:-

மேலே குறிப்பிட்டுள்ள மருதம்பட்டை பொடி,மாதுளம் பழத் தோல் பொடி,வெள்ளரி லோத்திரம் போன்றவை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.ஒரு மாதத்திற்கு தேவையான அளவு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு பாத்திரத்தில் 300 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.அடுத்து 3 கிராம் மருதம்பட்டை பொடி,3 கிராம் மாதுளம் பழத் தோல் பொடி,3 கிராம் வெள்ளி லோத்திரம் போன்றவற்றை சேர்த்து கொதிக்க வைத்து குடித்து வந்தால் அதிக உதிரப்போக்கு ஏற்படுவது கட்டுப்படும்.

Exit mobile version