Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் சிறுநீர் டார்க் மஞ்சள் கலரில் இருக்கா? இதற்கான காரணமும் எளிய தீர்வும்!!

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகளில் சிறுநீறும் ஒன்று.நம் உடல் ஆரோக்கியத்தை நாம் கழிக்கும் சிறுநீரை கொண்டு கணித்துவிடலாம்.சிறுநீர் வெளிர் மஞ்சள்,வெண்மை,அடர் மஞ்சள்,ஆரஞ்சு போன்ற நிறத்தில் வெளியேறுகிறது.

நம் உடலில் உள்ள இரத்தத்தில் இருக்கும் கழிவுகள் வடிக்கப்படப்பட்டு சிறுநீராக வெளியேறுகிறது.எல்லா நேரங்களிலும் நாம் கழிக்கும் சிறுநீர் ஒரே நிறத்தில் இருப்பதில்லை.சிலவகை சிறுநீர் நிறம் நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் அறிகுறியாக இருக்கலாம்.

எனவே நீங்கள் கழிக்கும் சிறுநீரின் நிறம் எப்படி இருக்கிறது என்பதை முதலில் கவனியுங்கள்.உங்கள் சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக இருந்தால் உடலில் தண்ணீர் சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.உடல் சூடு,நீர்ச்சத்து குறைபாடு,அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்தல் போன்ற காரணங்களால் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.அதேபோல் உடலில் வைட்டமின் பி அதிகமாக இருந்தாலும் அடர் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.கோடை காலத்தில் பெரும்பாலானோருக்கு அடர் மஞ்சள் நிற சிறுநீர் வெளியேறும்.

சிறுநீரகத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருந்தால் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறும்.பழுப்பு நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது மாத்திரையின் விளைவு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.

பச்சை நிற சிறுநீர் கல்லீரல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளை குறிக்கிறது.சிறுநீரில் நுரை வருவது நோய் தொற்று பாதிப்பை உணர்த்துகிறது.கேரட்,பீட்ரூட் போன்ற கலரான உணவுகளை சாப்பிட்டால் சிறுநீரின் நிறம் சிவப்பு,ஆரஞ்சு போன்ற நிறத்தில் இருக்கும்.

உங்கள் சிறுநீர் நிறம் அடர்ந்த மஞ்சள் நிறத்தில் தொடர்ந்து வெளியேறினால் நீங்கள் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டுமென்று அர்த்தம்.காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.குடிக்கும் நீரில் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக் கழிவுகள் முழுமையாக வெளியேறிவிடும்.

Exit mobile version