துருக்கி: இஸ்ரேல் மற்றும் துருக்கி இடையில் போர் பதற்றம் நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
நாம் கடந்த சில ஆண்டுகளாக உலக செய்திகள் என்றால் அதில் போர் செய்திகளை மட்டும் தான் அதிகம் காண முடியும் அந்த அளவுக்கு பல போர்கள் வெடித்து வருகிறது. அதில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் அடுத்து பாலஸ்தீனம் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் என தொடர்ந்து நடந்து கொண்டுதான் வருகிறது.
இந்த போர்களில் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர் லட்சக்கணக்கானோர் காயமடைந்தார். இவ்வாறு இருக்கும் நிலையில் மேலும் இஸ்ரேல் மாறும் ஈரான் இடையிலான போர் இஸ்ரேல் மற்றும் சிரியா இடையில் சண்டை சச்சரவு நீடித்து வருகிறது.இப்படி இருக்கும் நிலையில் தான் துருக்கி இஸ்ரேல் நாடு பிரதமர் நெதன்யாகு விற்கு வார்னிங் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது துருக்கி சுற்றி இருக்கும் நாடுகளின் பிற பகுதிகளை கைப்பற்றி ஓட்டோமான் அரசாக மாற்ற திட்டமிட்டுள்ளது.ஒரு காலத்தில் துருக்கி, ரோமானிய, உக்ரைன், ரஷ்யா, இஸ்ரேல், இத்தாலி, லெபனான், பாலஸ்தீனம், ஈரான் என பல பகுதிகள் துருக்கியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது தான் ஓட்டோமான் பேரரசு. துருக்கி சிரியா உடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. மேலும் லெபனான் மற்றும் சிரியா உள்ளிட்ட பகுதிகளை தன்வசபடுதிகொள்ள திட்டம் வகுத்து வருகிறது. தன் வச படுத்திய பின் இஸ்ரேல் உடன் போர் தொடங்கும் என கூறப்பட்டு வருகிறது.