அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!!

0
131

அடுத்தடுத்து விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ!!! அடுத்த விண்கலம் எதற்கு என்று தெரியுமா!!!

சந்திரயான் 3, ஆதித்யா எல் 1 விண்கலங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ புதிய விண்கலத்தை விண்ணுக்கு அனுப்ப தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பூமியின் துணைக்கோளான சந்திரனை ஆய்வு செய்ய சமீபத்தில் சந்திரயான் 3 என்ற விண்கலத்தை இஸ்ரோ நிறுவனம் அனுப்பி விக்ரம் லேண்டரை நிலவின்.தென் துருவத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தி பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு முன்னர் அனுப்பிய சந்திரயான் விண்கலங்கள் மூலமாக நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்பொழுது சந்திரயான் 3 விண்கலம் மூலமாக நிலவில் இரும்பு, அலுமினியம், கந்தகம், சிலிகான், கால்சியம் ஆகிய மூலக்கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான் 3 வெற்றியைத் தொடர்ந்து இஸ்ரோ அடுத்ததாக சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை சில நாட்களுக்கு முன்னர் அனுப்பியுள்ளது. இதை தொடர்ந்து வானத்தில் நடக்கும் நிகழ்வுகளை இன்னும் ஆழமாக புரிந்து கொள்வதற்கு “எக்ஸ்போசாட்” என்ற கண்காணிப்பு விண்கலனை நிலவுக்கு செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்த எக்ஸ்போசாட் விண்கலத்தில் போலிக்ஸ், எக்ஸ்பெக்ட் ஆகிய இரண்டு அறிவியல் ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. அதாவது எக்ஸ்ரே ஒளிக்கதிர் மூலமாக செயல்படும் முனைவுமானியும், எக்ஸ்ரே ஒளிக்கதிர் நிறமாலைமானியும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த எக்ஸ்போசாட் விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட பிறகு 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப் பணியில் ஈடுபடவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் இந்த எக்ஸ்போசாட் விண்கலம் விண்ணில் செலுத்துவதற்கு தயாராக இருக்கின்றது என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.